நோ பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தி அபராதம் கட்டிய தம்பி நடிகர்: வைரல் வீடியோ

By Siva

மும்பை: பாலிவுட் நடிகர் இஷான் கட்டார் தனது பைக்கை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி அபராதம் செலுத்தியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷானும் அண்ணன் வழியில் நடிகராகிவிட்டார். தடக் படத்தில் நடித்ததில் இருந்து அவருக்கும், ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்விக்கும் இடையே காதல் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.

Ishaan Khatter fined for leaving bike in no parking zone

இஷானுக்கு பைக் ஓட்டுவது என்றால் பிடிக்கும். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். ஞாயிற்றுக்கிழமை அவர் தனது பைக்கில் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

நோ பார்க்கிங் பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு இஷான் சென்றுவிட்டார். அங்கு வந்த போக்குவரத்து போலீசார் இஷானின் பைக்கை பறிமுதல் செய்தனர். இதை பார்த்த இஷான் ஓடி வந்து அவர்களிடம் பேசி தனது பைக்கை வாங்கினார்.

நோ பார்க்கிங் இடத்தில் பைக்கை நிறுத்தியதற்காக அவருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. இஷானின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

முன்னதாக இஷான் ஹெட்போன் போட்டுக் கொண்டு மும்பை தெருக்களில் சைக்கிள் ஓட்டினார். அதை பார்த்தவர்கள் மக்கள் அதிகம் நடமாடும் தெருவில் இப்படியா ஹெட்போன் அணிந்து சைக்கிள் ஓட்டுவது என்று அவருக்கு அறிவுரை வழங்கினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X