ஸ்ரீதேவி மகள் மடியில் படுத்திருக்கும் வாரிசு நடிகர்: வைரல் புகைப்படம்

By Siva

Recommended Video

ஸ்ரீதேவி மகள் மடியில் படுத்திருக்கும் வாரிசு நடிகர்: வைரல் புகைப்படம்

மும்பை: தான் ஜான்வி கபூர் மடியில் தலை வைத்து படுத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகர் இஷான் கட்டார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பியான இஷான் கட்டாரும், ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரும் சேர்ந்து நடித்த தடக் படம் ரூ. 100 கோடி வசூல் செய்தது. ஜான்வி நடித்த முதல் படமான தடக்கின் வெற்றியை கொண்டாட ஸ்ரீதேவி இல்லையே என்று பாலிவுட்காரர்கள் வருத்தப்பட்டனர்.

இந்நிலையில் இஷான் கட்டார் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 ஜான்வி

ஜான்வி

இஷான் தான் ஜான்வி கபூர் மடியில் தலை வைத்து படுத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்களோ, இன்னுமா தடக் படத்தை விளம்பரம் செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சிலரோ அவர்களின் பெயர்களை சேர்த்து இஷான்வி என கமெண்ட் அடித்துள்ளனர்.

தடக்

தடக்

தடக் படத்தில் நடித்ததில் இருந்து இஷானும், ஜான்வியும் நல்ல நண்பர்களாக உள்ளனர். படப்பிடிப்பு துவங்கும் முன்பு இருவரும் பேசிப் பழக வேண்டும் என்பதற்காக இயக்குனர் அவர்களை ஜோடியாக வெளியே செல்ல வைத்தார். அப்போது ஜான்வி இஷானுடன் பேச ரொம்பவே வெட்கப்பட்டு அமைதியாக இருந்தார்.

கிசுகிசு

கிசுகிசு

பேசிப் பழகுங்கள் அப்பொழுது தான் படத்தில் காதல் காட்சிகள் தத்ரூபமாக வரும் என்று இயக்குனர் சொன்னதால் ஜோடியாக ஊர் சுற்றினார்கள் இஷானும், ஜான்வியும். ஆனால் அவர்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது. அதன் பிறகே உண்மை தெரிய வந்தது. அப்படி வெட்கப்பட்ட ஜான்வி படப்பிடிப்பு தளத்தில் இஷானை தனது மடியில் அமர வைத்த புகைப்படம் வெளியான போது அதை பார்த்து ரசிகர்கள் வியந்தனர்.

 படங்கள்

படங்கள்

ஜான்வியை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் கரண் ஜோஹார் அவரின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். தடக் படத்தை அடுத்து கரண் ஜோஹார் இயக்கும் தக்த் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜான்வி. அந்த படத்தில் கரீனா கபூர், ரன்வீர் சிங், ஆலியா படம், மாதுரி தீக்ஷித், அனில் கபூர் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜான்விக்கு சின்ன கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X