ஸ்ரீதேவி மகளின் மானத்தை வாங்கிய வாரிசு நடிகர்
மும்பை: ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வியின் மானத்தை பப்ளிக்காக வாங்கிவிட்டார் நடிகர் இஷான் கட்டார்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூருக்கு பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் என்றால் மிகவும் பிடிக்கும். அவரின் நடிப்பு என்றால் அவருக்கு உயிர். அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்று ஐ லவ் யூ என்று எல்லாம் ஜான்வி கமெண்ட் போட்டு ராஜ்குமார் ராவை கலாய்த்துள்ளார்.
ராஜ்குமார் ராவ் பத்ரலேகா என்ற நடிகையை காதலித்து வருகிறார்.

ராஜ்குமார்
தினேஷ் விஜயன் இயக்கும் ரூஹப்ஸா படத்தில் ராஜ்குமார் ராவுடன் சேர்ந்து நடிக்கிறார் ஜான்வி. இந்நிலையில் ஜான்வியின் காதலர் என்று கிசுகிசுக்கப்படும் இஷான் கட்டாரோ ராஜ்குமார் ராவை ஜான்வியிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு எச்சரித்துள்ளார்.

ஜான்வி
ஜான்விக்கு உங்களை மிகவும் பிடிக்கும். அதனால் அவரிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும் என்று இஷான் கட்டார் ராஜ்குமார் ராவை எச்சரித்தார். இதை பார்த்தவர்கள் ஜான்வியை பற்றி தவறாக பேசத் துவங்கிவிட்டனர். அடுத்த பெண்ணின் காதலரிடம் இப்படியா வழிவது என்று ஜான்வியின் கேர்கடரை கேவலப்படுத்துகிறார்கள்.

ஸ்ரீதேவி
ஜான்விக்கு ராஜ்குமார் ராவின் நடிப்பை தான் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் தாயை போன்றே அடுத்த பெண்ணுக்கு சொந்தமானவர் மீது ஆசைப்படுகிறார் ஜான்வி என்று பேசுகிறார்கள். இது நியாயமே இல்லை. இஷான் ஏதோ விளையாட்டாக ராஜ்குமார் ராவை எச்சரிக்க அது விபரீதமாகிவிட்டது.

ரன்பிர் கபூர்
ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது ஜான்வி பார்ட்டிக்கு சென்ற இடத்தில் நடிகர் ரன்பிர் கபூர் மீது ஆசைப்பட்டு அவரை பின்தொடர்ந்ததாக பாலிவுட்காரர்கள் பேசினார்கள். நான் அப்படி எதுவும் செய்யவில்லை என்று ஜான்வி தனது அம்மாவிடம் கூறி அழுதார். பாவம், தற்போது சொல்லி அழ கூட அம்மா இல்லை.


Click it and Unblock the Notifications











