வாய்ப்புக்காக அலைய வேண்டாம் ராஜு.. கதை ரெடியா இருக்கா.. அரங்கை அதிர வைத்த ஐசரி கணேஷ்!
சென்னை: வேல்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய தனது மருமகனை கையோடு அழைத்துச் செல்ல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே வந்து விட்டார்.
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தின் டிரைலரையும் பிக் பாஸ் வீட்டில் வெளியிட்டார்.
வருணுக்கு மட்டுமின்றி ராஜு உள்ளிட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் வாய்ப்பு தரப் போவதாக ஐசரி கணேஷ் உறுதியளித்து அரங்கையே அதிர வைத்தார்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில்
பழம்பெரும் நடிகர் ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ் தனது அப்பா பெயரில் உருவாக்கி உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தில் பல படங்களை தயாரித்துள்ளார். வருணின் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தையும் அவர் தான் தயாரித்துள்ளார்.

வாய்ப்பு தேடும் ராஜு
தனது மனைவி தாரிகா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த போது இனிமே வாய்ப்பு தேடி அலைய தேவை இருக்காதுல்ல என ராஜு கேட்டது ரசிகர்களை ரொம்பவே நெகிழ வைத்தது. இயக்குநராக ஆக வேண்டும் என்கிற கனவோடு பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு வந்த ராஜு விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த நிலையில், பல சீசன்களாக முயற்சி செய்து இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

கதை ரெடியா ராஜு
பிரியங்கா நல்லா இருக்கியாம்மா என நலம் விசாரித்த ஐசரி கணேஷ் என்ன ராஜு கதை ரெடியா இருக்கா? என கேட்டு ராஜு எதிர்பார்த்திருந்த 'கேட்'டை திறந்து வைத்து விட்டார். இயக்குநராக ஆக வேண்டும் என்கிற ராஜுவின் கனவு கூடிய சீக்கிரமே வேல்ஸ் நிறுவனம் மூலமாக நனவாக எனும் தெரிகிறது.

எல்லாருக்கும் வாய்ப்பு
மருமகன் வருணை மட்டும் பெரிய ஆளாக மாற்ற வேண்டும் என நினைக்காமல் வருணுடன் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களாக இருந்த அனைவருக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரப் போவதாக ஐசரி கணேஷ் அறிவித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
Recommended Video

இதுதான் சான்ஸ்
வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நீங்க சொல்வீங்க, இந்த மேடையில் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நீங்கள் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஐசரி கணேஷ் கோரிக்கை வைக்க 4 பேர் முன்னிலையில் தான் அட்வான்ஸ் கொடுப்பார்கள். ஆனால், இவர் கோடி பேர் மத்தியில் அட்வான்ஸ் கொடுக்கிறார். கண்டிப்பாக பண்ணிடலாம் என பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி தனக்கு கேட் திறந்து வைத்திருக்கிறார் ஐசரி கணேஷ் என கமல் பாராட்டினார்.


Click it and Unblock the Notifications











