For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோமாளி வெற்றி.. பிரதீப் ரங்கநாதனுக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசளித்த ஐசரி கணேஷ்

|
Comali Movie Audience Opinion

சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, அதன் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஆடம்பர ஹோண்டா சிட்டி கார் ஒன்றை தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் பரிசளித்துள்ளார். ஏற்கனவே எல்.கே.ஜி திரைப்படத்தை இயக்கிய பிரபுவுக்கும் கார் ஒன்றை ஐசரி.கே.கணேஷ் பரிசளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஐசரி.கே.கணேஷ் சார் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுப்பார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார்.

டாக்டர் ஐசரி.கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனத்துக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த எல்.கே.ஜி.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடித்த கோமாளி படமும் மிகப் பெரிய வணிக வெற்றியை ஈட்டியிருக்கிறது.

Ishari K.Ganesh Gifted a luxury Honda City car to Director Pradeep Ranganathan

கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியான கோமாளி விமர்சகர்களின் சிறப்பான பாராட்டுதல்களைப் பெற்றதுடன், ரசிகர்களின் மத்தியிலும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றதால், வசூல் ரீதியில் பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்திருக்கிறது.

எங்களை ஸ்டண்ட் யூனியனில் சேர்க்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம்-ஸ்டண்ட் கலைஞர்கள்

இந்த வெற்றிக்குக் காரணமான கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் ஓர் ஆடம்பர ஹோண்டா சிட்டி காரை பரிசாக அளித்திருக்கிறார். இதைப் போலவே முன்னர் எல்.கே.ஜி. படத்தை வெற்றிப் படமாக்கிய இயக்குநர் பிரபுவுக்கும் கார் ஒன்றை ஐசரி.கே.கணேஷ் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

Ishari K.Ganesh Gifted a luxury Honda City car to Director Pradeep Ranganathan

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இது குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் போது, தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் சார் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுப்பார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கோமாளி படம் துவங்கியதிலிருந்தே தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி, ஐசரி கணேஷ் சார் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததுடன், படம் சிறப்பாக உருவாகத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து உதவினார்.

கோமாளி படத்தில் 1990களின் குழந்தைகள் பற்றிய பகுதியில் நான் ஒரு விஷயத்தை தவற விட்டிருந்தேன். அதாவது அப்போதைய குழந்தைகள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் பரிசு தருவேன் என்று சொல்லி பெற்றோர் ஊக்கம் கொடுப்பார்கள்.

Ishari K.Ganesh Gifted a luxury Honda City car to Director Pradeep Ranganathan

இதை நான் படத்தில் காட்சிப் படுத்தத் தவறிவிட்டேன். ஆனால் என் தந்தையைபோல் நான் மதிக்கும் ஐசரி கணேஷ் சார், கோமாளி படத்தின் வெற்றிக்காக எனக்கு இப்போது ஹோண்டா சிட்டி கார் பரிசளித்திருக்கிறார்.

ஜெயம் ரவி அண்ணன், காஜல் அகர்வால், சம்யுக்தா, கே.எஸ்.ரவிகுமார் சார், ஹிப் ஹாப் ஆதி மற்றும் படத்தில் பங்கு பெற்ற அத்தனை கலைஞர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

Read more about: comali கோமாளி
English summary
Producer Ishari K.Ganesh has gifted a luxury Honda City car to its director Pradeep Ranganathan after the success of actor Jayam Ravi's Comali movie. Prabhu, who has already directed the LKG film, was also awarded a car by Ishari K.Ganesh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more