ட்விட்டரில் இருந்து வெளியேறினார் யுவன்சங்கர் ராஜா
சென்னை: இஸ்லாத்தைப் பின்பற்றுவது தொடர்பாக எழுந்த விமர்சனங்களின் எதிரொலியாக, தீவிரமாக இயங்கி வந்த ட்விட்டர் தளத்தில் இருந்து இசைமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விலகினார்.
தான் இசையமைக்கும் படங்கள் பற்றிய செய்திகள், பாடல்கள் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வந்தார் யுவன்சங்கர்ராஜா.
இசையமைப்பாளர்களில் தொடர்ச்சியாக ட்விட்டர் தளத்தில் இயங்கி வந்தவர் யுவன் சங்கர் ராஜா மட்டும்தான்.
தற்போது இஸ்லாம் மதத்தினைத் தழுவியுள்ள யுவன், தனது ட்விட்டர் தளம் மூலமே அதனை உறுதி செய்தார்.

இஸ்லாம் மதத்திற்கு....
"ஆம். நாம் இஸ்லாம் மதத்தினை பின்பற்றுகிறேன். எனது குடும்பத்தினர் எனது முடிவை ஏற்றுக்கொண்டார்கள்."

அப்பாவும் நானும்…
"நான் மூன்றாவது திருமணம் செய்துகொள்ளவில்லை. அச்செய்தி பொய்யானது." "எனக்கும் என் அப்பாவிற்கும் எந்தவிதத்திலும் கருத்து வேறுபாடு இல்லை" என்று இறுதியாக தனது ட்விட்டர் தளத்தில் ட்விட்டினார்.

திட்டிய ரசிகர்கள்
யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவது தொடர்பாக அவரது ட்விட்டர் தளத்தில் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்த வண்ணம் இருந்தனர்.

வெளியேறிய யுவன்
ரசிகர்களின் விமர்சனக் கனைகளை எதிர்கொள்ள விரும்பாத யுவன் சங்கர் ராஜா, தனது ட்விட்டர் கணக்கை முடக்கிவிட்டார்.
இதுநாள் வரை எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி என்று கடைசியாக ட்விட்டியுள்ளார் யுவன்.

காணமல் போன கணக்கு
யுவனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளமான @Raja_Yuvan என்ற கணக்கு இப்போது இல்லை. பிப்ரவரி 11ம் தேதியோடு அது முடக்கப்பட்டுவிட்டது.


Click it and Unblock the Notifications











