விமர்சகர்கள் காரித் துப்பியும், தமிழ் ராக்கர்ஸ் கசியவிட்டும் ஹிட்டான படம்

By Siva

ஹைதராபாத்: விமர்சகர்கள் கழுவிக் கழுவி ஊற்றிய ஐஸ்மார்ட் ஷங்கர் படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ராம் போதினேனி, நபா நடேஷ், நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 18ம் தேதி வெளியான தெலுங்கு படம் ஐஸ்மார்ட் ஷங்கர். படத்தை பார்த்த விமர்சகர்கள் இது எல்லாம் ஒரு படமா, இயக்குநர் மூளையை கழற்றி வைத்துவிட்டு எடுத்தாரா என்று கழுவிக் கழுவி ஊற்றினார்கள்.

iSmart Shankar collects Rs. 48 crores in 4 days

சிலரோ, நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தயவு செய்து யாரும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டாம் என்றனர். இந்நிலையில் நடிகை சார்மி, பூரி ஜெகன்நாத்துடன் சேர்ந்து தயாரித்த ஐஸ்மார்ட் ஷங்கர் படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் ராம் போதினேனியின் கெரியரில் அதிகம் வசூல் செய்த படமாக ஆகியுள்ளது ஐஸ்மார்ட் ஷங்கர். படத்தின் தலைப்பில் மட்டும் தான் ஸ்மார்ட் திரையில் ஒரு மண்ணும் இல்லை என்று சில விமர்சகர்கள் கேவலமாக விமர்சித்தனர். இது போதாது என்று தமிழ் ராக்கர்ஸ் வேறு ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தை ஆன்லைனில் கசியவிட்டது.

iSmart Shankar collects Rs. 48 crores in 4 days

அப்படி இருந்தும் ரசிகர்கள் தொடர்ந்து தியேட்டர்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து சார்மி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார். படம் இந்தியா மட்டும் அல்ல அமெரிக்காவிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று ரசிகர்கள் இப்படி ஹிட்டாக்கியுள்ளனர் என்று விமர்சகர்களே குழம்பியுள்ளனர். படத்தை பார்த்த பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவோ நபா நடேஷ் தான் டோலிவுட்டின் அடுத்த இலியானா என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐஸ்மார்ட் ஷங்கர் ரிலீஸான நான்கே நாட்களில் ரூ. 48 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சார்மி ட்வீட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X