அந்த ஹிட் படக் கதை என்னுடையது, சுட்டுட்டாங்க: பிரபல இயக்குநர் மீது ஹீரோ புகார்
சென்னை: ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் கதை தன் படத்தினுடையது போன்று உள்ளதாக நடிகர் ஜெய் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ராம் போதினேனி நடிப்பில் கடந்த 18ம் தேதி வெளியான தெலுங்கு படமான ஐஸ்மார்ட் ஷங்கர் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. படம் ரிலீஸான நான்கு நாட்களில் ரூ. 48 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த படத்தை யாரும் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டாம், கொடூர மொக்கை என்று விமசர்கர்கள் தெரிவித்தனர். ஆனால் ரசிகர்களோ எந்த விமர்சனத்தையும் பார்ப்பதாக இல்லை. தொடர்ந்து தியேட்டர்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் ஒரு படம்னு பூரி ஜெகன்நாத் எடுத்துள்ளார், மூளையை கழற்றி வைத்துவிட்டார் போன்று என்றெல்லாம் விமர்சகர்கள் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கினார்கள். இந்நிலையில் ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் கதை சுடப்பட்டது என்று நடிகர் ஜெய் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
ரோஜாவனம் படம் மூலம் கோலிவுட் வந்த ஜெய் ஆகாஷ் என். ராதாவின் இயக்கத்தில் நான் யார் என்ற படத்தில் நடித்தார். கடந்த 2016ம் ஆண்டு வெளியான தன்னுடைய நான் யார் படத்தின் கதை போன்றே உள்ளது ஐஸ்மார்ட் ஷங்கர் என்கிறார் ஜெய் ஆகாஷ்.
இது குறித்து ஜெய் ஆகாஷ் கூறியதாவது,
நான் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் ஐஸ்மார்ட் ஷங்கர் படம் பார்த்தேன். படத்தின் மூலக்கரு மற்றும் திரைக்கதை அப்படியே என் படத்தினுடையது போன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
அதன் பிறகு கதை விவகாரம் தொடர்பாக இயக்குநர் பூரி ஜெகன்நாத்தை தொடர்பு கொள்ள முயன்றேன். கதை தொடர்பாக அவருக்கு சில ஆவணங்களை கூட அனுப்பி வைத்தேன். ஆனால் அவரோ, அவரின் மேனேஜரோ இதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து நான் கதை திருட்டு தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன்.
நான் என் படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளேன். ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தை பார்த்தவர்கள் எப்படி என் படத்தை பார்ப்பார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.
இந்த புகார் குறித்து பூரி ஜெகன்நாத்தோ, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை சார்மியோ இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











