»   »  சூப்பர் ஸ்டாரு அஜீத்து?: இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கே ஓபராயி..

சூப்பர் ஸ்டாரு அஜீத்து?: இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கே ஓபராயி..

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் என பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் தல 57 படத்தின் வில்லனை பாலிவுட்டில் இருந்து அழைத்து வந்துள்ளனர். அந்த வில்லன் வேறு யாரும் அல்ல மணிரத்னத்தின் அலைபாயுதே இந்தி பதிப்பில் ஹீரோவாக நடித்த விவேக் ஓபராய் தான்.

முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

அஜீத்

அஜீத்

ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் அஜீத்துடன் என் முதல் தமிழ் படத்தில் நடிக்கிறேன். நான் அவரை அஜீத் அண்ணா என்று தான் அழைப்பேன் என விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

விவேக் ஓபராய்

விவேக் ஓபராய்

பாவம் விவேக் ஓபராய்க்கு தமிழகத்தில் நடக்கும் சூப்பர் ஸ்டார் கோதா பற்றியும் அது அஜீத்துக்கு பிடிக்காது என்பதும் தெரியாமல் அவரை போய் ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் என்று கூறிவிட்டார்.

சூப்பர் ஸ்டாரு அஜீத்து?

சூப்பர் ஸ்டாரு அஜீத்து?

முதல் தமிழ் படத்திலேயே ஓபராயி ஓவரா கூவுகிறாரே என்று ரஜினி ரசிகர்கள் கருதுகிறார்கள். ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் எங்க தலைவர் மட்டுமே என்கிறார்கள்.

தெரியாமல் சொல்லிட்டாரு

தெரியாமல் சொல்லிட்டாரு

ஏதோ பாலிவுட்காரர் கோலிவுட் பற்றி தெரியாமல் அஜீத்தை சூப்பர் ஸ்டார் என சொல்லிவிட்டார். இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளலாமா பாஸுகளா?

English summary
Bollywood actor Vivek Oberoi addressing Ajith as one and only super star hasn't gone down well with Rajini fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil