அமலா பால் நிர்வாண காட்சியால் சிக்கல்.. நாளை ரிலீஸாகுமா ஆடை?

Recommended Video

Amala Paul Aadai:சர்ச்சையை கிளப்பிய புதிய Poster- வீடியோ

சென்னை: ஆடை படத்தில் உள்ள ஆபாச காட்சிகளுக்கு தடைக்கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேயாத மான் படத்தை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ள படம் ஆடை. இந்த படத்தில் நிர்வாண கோலத்தில் நடிகை அமலா பால் நடித்துள்ளார்.

இந்த படத்தின் போஸ்டர், டீசர், ட்ரெயிலர் என ஒவ்வொன்றும் வெளியாகும் போதும் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. படத்தில் நாயகி அமலா பால், தம், தண்ணி என சுற்றி வருகிறார்.

பெரிய விளம்பரம்

பெரிய விளம்பரம்

இதனால் படம் எப்போது ரிலீசாகும் என காத்திருக்கின்றனர் ரசிகர்கள். அமலா பால் படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறார் என்பதே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக உள்ளது.

டிஜிபி அலுவலகத்தில் புகார்

டிஜிபி அலுவலகத்தில் புகார்

ஆடை படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் அமலா பால் நிர்வாணமாக உள்ள போஸ்டர்கள் அதிகளவு வைரலாகி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் ஆபாச காட்சிகளுக்கு தடை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தை சீரழிக்கும்

சமுதாயத்தை சீரழிக்கும்

அனைத்து அரசியல் மக்கள் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் நிர்வாண காட்சியை பயன்படுத்தி படத்தை விளம்பரப்படுத்துவது சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் உள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஏற்கனவே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ் திரைப்பட கதாநாயகிகளில் ஒருவராக பார்க்கப்படும் அமலாபால் இது போன்ற காட்சிகள் கொண்ட திரைபடத்தில் நடித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

போராட்டம் நடத்த திட்டம்

போராட்டம் நடத்த திட்டம்

சுவரொட்டிகளிலும் மற்றும் பிற விளம்பரங்களிலும் ஆபாச காட்சி இடம் பெறுவதற்கு தடை விதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அப்படி தடைவிதிக்க முடியாத பட்சத்தில் போராட்டம் நடத்தவும் தயார் என்றும் ராஜேஸ்வரி பிரியா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X