Don't Miss!
- News "ரூம் முழுக்க போட்டோக்கள்" அத்தனையும் ஆபாசம்! பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்! காதலர் தினத்தில் கொடூரம்
- Sports வரம்பு மீறிய ரோகித் ரசிகர்கள்.. அம்பானி குடும்பத்திற்கு தலை குனிவு.. X தளத்திற்கு வந்த சண்டை
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
ஒரே நாள்தான் இருக்கு.. கடைசி நேரத்தில் பரபர பஞ்சாயத்து.. பிரபல விஜே பிக்பாஸில் பங்கேற்பதில் சிக்கல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல விஜேவான அர்ச்சனா பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் ராக்கெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
மொத்த நிகழ்ச்சிக் குழுவும் தீயாய் வேலை செய்து வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் கொரோனா சோதனைக்கு பிறகு தனிமை படுத்தப்பட்டு ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டூ மச்சா இருக்காம்.. பிரபல பிக் பாஸ் நடிகையின் கிளாமர் செல்ஃபி.. ஆபாசமாக விளாசும் நெட்டிசன்ஸ்!
இணையத்தில் லீக்
போட்டியாளர்கள் ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ள போட்டோக்கள் கூட இணையத்தில் கசிந்து வைரலானது. இருப்பினும் போட்டியாளர்களின் பெயர்கள் நிகழ்ச்சியின் போதுதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுவார்கள்.
ஃபைனல் லிஸ்ட்
அதுவரை காத்திருக்க வேண்டும் என்றாலும் இப்போதே நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் என பிக்பாஸில் பங்கேற்க போகும் போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்ட் என ஒரு பட்டியல் இணையத்தில் வலைய வருகிறது.
மொத்தம் 15 பேர்
அதன்படி நடிகை சனம் ஷெட்டி, கேப்ரில்லா, நடிகை ரேகா, நடிகை ஷிவானி நாராயணன், நடிகை ரம்யா பாண்டியன், விஜே அர்ச்சனா, விஜய் டிவி பிரபலமான அறந்தாங்கி நிஷா, பாடகர் அஜித், பாடகர் வேல்முருகன், நடிகர் பாலாஜி முருகதாஸ், நடிகர் சுரேஷ், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, நடிகர் அனுமோகன், மாடல் சோம்சேகர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்பட்டது.
திங்கள் கிழமை ஷுட்டிங்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களில் மேடையில் பர்ஃபார்மன்ஸ் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கான படப்பிடிப்பு கடந்த திங்கள் கிழமை நடைபெற்றதாகவும் இதில் சில பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.
பெரும் பஞ்சாயத்து
இதில் பர்ஃபார்மன்ஸ் செய்ய காத்திருந்த பிரபல விஜேவான அர்ச்சனாவுக்கு அவர் பணிபுரியும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து அழுத்தம் தரப்பட்டதாகவும், இதனால் பெரிய பஞ்சாயத்து நடைபெற்று கடைசியில் அவர் பர்ஃபாமன்ஸ் செய்யாமல், நிறுவனத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அர்ச்சனாவுக்கு சிக்கல்
கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கலால் விஜே அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது கேள்விக் குறியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நிகழ்ச்சில் பங்கேற்பது தொடர்பாக அவர் பணிபுரியும் சேனலிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிகிறது. வேலையே வேண்டாம் என உதறிவிட்டு பிக்பாஸுக்கு வருவாரா அல்லது அதுதான் முக்கியம் என பிக்பாஸை கைவிடுவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Recommended Video
ஜீ தமிழ் விஜே
விஜே அர்ச்சனா சன் டிவியில் ஒளிப்பரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமானார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக உள்ள அர்ச்சனா தனது மகளுடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.