ஆரம்பமேவா..பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் முன்பே பஞ்சாயத்தை கூட்டிய விஜே.. ரணகளமான அறிமுக நிகழ்ச்சி!
சென்னை: பிக்பாஸ் அறிமுக நிகழ்ச்சி பிரபல விஜே ஒருவரால் அல்லோகளப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்று மாலை 6 ஒளிபரப்பாக தொடங்குகிறது.
இதற்காக கடந்த ஒரு மாதமாகவே போட்டியாளர் தேர்வு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என தீயாய் வேலை செய்து வந்தது நிகழ்ச்சிக் குழு.

105 நாட்கள்
ஒரு வழியாக இன்று மாலை நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. இன்று முதல் 105 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதனால் அடுத்த 105 நாட்களுக்கும் ரசிகர்களுக்கு நல்ல என்டெர்டெயின்மென்ட் இருக்கும எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபலங்களின் பெயர்
நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் பேட்டியாளர்கள் இவர்கள்தான் என சில பிரபலங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் கடந்த சில நாட்களாய் இணையத்தில் வளைய வந்தது. பல விதமான பட்டியல் வெளியாவதும் பின்னர், சில பிரபலங்கள் நாங்கள் இல்லை என்று கூறுவதும் வாடிக்கையாய் இருந்தது.

அர்ச்சனாவுக்கு அழுத்தம்
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகள் ஷூட் செய்யப்பட்டது. உறுதி செய்யப்பட்ட விஜய் டிவியை சேர்ந்த சில பிரபலங்கள் இதில் பர்ஃபார்மன்ஸ் செய்தனர். அப்போது தனது டர்னுக்காக காத்திருந்த ஜீ தமிழ் தொலைக்காட்சியின் விஜேவான அர்ச்சனாவுக்கு அவர் பணிபுரியும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து அழுத்தம் தரப்பட்டதாக தகவல் வெளியானது.

கடைசி நேர சிக்கல்
இதனால் பெரிய பஞ்சாயத்து நடைபெற்று கடைசியில் அவர் பர்ஃபாமன்ஸ் செய்யாமல், நிறுவனத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கலால் விஜே அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது சந்தேகம் என்றும் தகவல் வெளியானது.

ஜீ தமிழ் சட்ட வல்லுநர்கள்
இந்நிலையில் போட்டியாளர்களின் அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையை அடுத்த ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று காட்சியாக்கப்பட்டது. அப்போது அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பு அங்கு வந்த ஜீ தமிழ் சட்ட வல்லுநர்கள், அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என தடுத்தாக தெரிகிறது.

சட்ட சிக்கல்கள்
ஆனால் அர்ச்சனா நான் பங்கேற்பேன் என உறுதியாக சொல்ல, சட்ட வல்லுநர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஜீ தமிழுடனான ஒப்பந்தத்தின் படி இன்னும் பணிகள் முடியாமல் இருப்பதாகவும் மீறி பங்கேற்றால் சட்டசிக்கல்கள் வரும் என்றும் சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

வீட்டிற்குள் செல்லும் முன்பே..
இருந்த போதும் அர்ச்சனா அவர்களுடன் மல்லுக்கு நின்றதாக தெரிகிறது. வழக்கமாக பிக்பாஸ் வீட்டுக்குள்தான் பஞ்சாயத்துக்களும் பரபரப்புகளும் இருக்கும், ஆனால் அர்ச்சனா விஷயத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே பஞ்சாயத்தில் சிக்கி பரபரப்பை கூட்டியிருக்கிறார். இதனால் அவர் பிக்பாஸில் அர்ச்சனா பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











