twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படத்துக்கான பப்ளிசிட்டியா.. நிஜ அக்கறையா.. ஜேன்யூ விசிட்.. தீபிகாவுக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும்!

    |

    டெல்லி: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே டெல்லி ஜவகர்லால் மாணவர்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

    கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜே.என்.யூ பல்கலைக் கழக மாணவர்களை விடுதிக்குள் புகுந்து முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தாக்கியதற்கு கடும் கண்டனம் தெரிவித்து மாணவர்கள் போராடி வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று இரவு ஜே.என்.யூ பல்கலைக் கழகத்திற்கு சென்ற தீபிகா படுகோனே மாணவர்கள் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து தீபிகா படுகோனேவின் சபாக் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹாஷ்டேக்கும், தீபிகாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஹாஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

    குவிகிறது பாராட்டு

    மாணவர்கள் போராட்டத்தில் பங்கு கொண்ட தீபிகா படுகோனேவை பாராட்டி ட்விட்டரில் #DeepikaPadukone என்ற ஹாஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. சுமார் பத்து நிமிடங்கள் மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட தீபிகாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.

    படத்துக்கான பப்ளிசிட்டி

    தீபிகா படுகோனே நடிப்பில் வரும் ஜனவரி 10ம் தேதி சபாக் திரைப்படம் திரைக்கு வருகிறது. அந்த படத்தை ஓட வைப்பதற்காகத் தான் தீபிகா படுகோனே இந்த போராட்டத்தில் பங்கு கொண்டார் என்றும், போராட்டத்தில் கலந்து கொண்ட தீபிகா படுகோனே எந்தவொரு கருத்தும் சொல்லாமல் அங்கிருந்து சென்றதையும் ஹைலைட் செய்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    மனித நேயம்

    மாணவர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக மாணவர்கள் போராட்டத்தில் தீபிகா படுகோனே கலந்து கொண்டுள்ளார். அவரை கொச்சைப் படுத்தும் விதமாக கருத்துக்களை பதிவிடாதீர்கள் என #IsupportDeepika என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி தீபிகா ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    ஒண்டர் உமன்

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராகவும், மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராகவும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் யாரும் வாய் திறக்காத நிலையில், மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தீபிகாவை ஒண்டர் உமன் என சித்தரித்து கார்ட்டூன் வரைந்துள்ளனர்.

    பிளாக்பஸ்டர் ஆக்குவோம்

    ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மி அகர்வாலின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சபாக் படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது. மாணவர்களுக்கு ஆதரவாக தீபிகா படுகோனே சென்றுள்ளதால், #boycottChhapaak ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், 2020ம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் படமாக இந்த படத்தை மாற்றுவோம் என தீபிகா ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    ரியல் ஹீரோயின்

    தீபிகா நீங்க தான் ரியல் ஹீரோயின், உங்களுக்கு சல்யூட் அடிக்கிறோம் என பல இளைஞர்கள் தங்களது ஆதரவு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    டிக்கெட்டை கேன்சல் பண்ணுங்க

    படத்தில் மட்டுமல்ல ரியல் லைஃப்லையும் தீபிகா படுகோனே நன்றாக நடித்து வருகிறார். நான் என்னுடைய சபாக் பட டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டேன். நீங்களும் உங்க டிக்கெட்டை கேன்சல் செய்யுங்க என #boycottchhapaak ஹாஷ்டேக்கில் தீபிகாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    வரலாறு பேசும்

    கவலைப்படாதீங்க தீபிகா படுகோனே, உங்களை இன்று உலகம் தூற்றினாலும், ட்ரோல் செய்தாலும், வரலாற்றில் நீங்கள் இடம்பிடித்து விட்டீர்கள் நிச்சயம் உங்களின் வீரச்செயலை வரலாறு பேசும் என இந்த நெட்டிசன் பாராட்டியுள்ளார்.

    English summary
    On Tuesday, Deepika Padukone stopped by Jawaharlal Nehru University, which has been embroiled in chaos and protests for the past three days, in order to show her solidarity with the students.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X