என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. தீபிகா படுகோனை காதலிக்கும் கோலிவுட் நடிகை.. அவரே போட்ட பதிவு!

ஹைதராபாத்: தமிழ் சினிமாவில் நடித்து வந்த ஐஸ்வர்யா மேனன் தற்போது தெலுங்கு திரையுலகில் ஏகப்பட்ட பெரிய படங்களில் கமிட் ஆகி உள்ளார்.

இந்நிலையில், பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்திற்காக ஹைதராபாத்துக்கு ஷூட்டிங் வந்த நடிகை தீபிகா படுகோன் உடன் ஐஸ்வர்யா மேனன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை பதிவிட்டுள்ளார்.

ஆனால், எல்லாத்துக்கும் ஹைலைட்டாக ஐஸ்வர்யா மேனன் கொடுத்துள்ள அந்த கேப்ஷன் தான் ரசிகர்களின் பார்வையை கவர்ந்துள்ளது.

ஈரோடு பொண்ணு

ஈரோடு பொண்ணு

மலையாள குடும்பத்தைச் சேர்ந்திருந்தாலும் நடிகை ஐஸ்வர்யா மேனன் பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஈரோட்டில் தான். கடந்த 2012ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் சித்தார்த், அமலா பால் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருப்பார். அதன் பிறகு ஆப்பிள் பெண்ணே படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர், தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்ப்படம் 2 ஹீரோயின்

தமிழ்ப்படம் 2 ஹீரோயின்

கடந்த 2018ம் ஆண்டு சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வெளியான தமிழ்ப்படம் 2 படத்திற்கு பிறகு தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஐஸ்வர்யா மேனன். தமிழ்ப்படம் 2 படத்திற்கு பிறகு ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார். அசோக் செல்வனின் வேழம் படத்திலும் நடித்துள்ள இவர் சமீப காலமாக தெலுங்கில் பிரம்மாண்ட படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

பான் இந்தியா படம்

பான் இந்தியா படம்

கார்த்திகேயா 2 படத்தில் ஹீரோவாக நடித்த நிகில் சித்தார்த் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் ஸ்பை படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட் ஆகி உள்ளார் ஐஸ்வர்யா மேனன். மேலும், வலிமை பட வில்லனும் தெலுங்கு திரையுலகின் இளம் ஹீரோவான கார்த்திகேயா உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன்.

தீபிகா படுகோன் உடன் செல்ஃபி

தீபிகா படுகோன் உடன் செல்ஃபி

இந்நிலையில், பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்திற்காக ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள நடிகை தீபிகா படுகோன் உடன் ஐஸ்வர்யா மேனன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் கோலிவுட் பிரபலங்களின் கவனத்தையும் கவர்ந்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.

தீபிகா மீது காதல்

தீபிகா மீது காதல்

தீபிகா படுகோன் உடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை விட அதற்கு ஐஸ்வர்யா மேனன் கொடுத்துள்ள கேப்ஷன் தான் பலரையும் கவர்ந்துள்ளது. அதில், "The moment I fell in love with a woman deepikapadukone all I can say is I love you" என கேப்ஷன் கொடுத்து, ஒரு பெண் மீது நான் காதல் கொண்ட தருணம் என பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா மேனன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X