உடல்நிலை சரியாயிடுச்சு... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செஞ்ச வேலையை பாருங்க!

சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக இவர் தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்யும் முடிவை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது சினிமா கேரியரை இவர் தற்போது துவங்கியுள்ளார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் நடிகர் தனுஷை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இத்தனை ஆண்டுகால திருமண வாழ்க்கை கசந்ததையடுத்து இருவரும் விவாகரத்து முடிவை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டனர்.

திரையுலகம் அதிர்ச்சி

திரையுலகம் அதிர்ச்சி

இதையடுத்து இவர்களது குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரும் அதிர்ச்சி அடைந்தனர். இருவருமே தங்களது இல்லற வாழ்க்கை மற்றும் திரையுலக வாழ்க்கையை சிறப்பாக தொடர்ந்து வந்த நிலையில் இவர்களின் இந்த முடிவு ரசிகர்களால் ஏற்க முடியாத அளவில் இருந்தது.

விவாகரத்து அறிவிப்பு

விவாகரத்து அறிவிப்பு

குறைந்தபட்சம் தங்களின் குழந்தைகளுக்காகவாவது இருவரும் இணைய வேண்டும் என்று அனைவரும் தெரிவித்தனர். இருவரும் இணைந்து இந்த முடிவை வெளியிட்ட நிலையில், தங்களது இந்த முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அனைவரையும் இவர்கள் கேட்டுக் கொண்டனர்.

தனுஷின் மாறன் ரிலீஸ்

தனுஷின் மாறன் ரிலீஸ்

இந்நிலையில் இருவரும் தங்களது திரையுலக பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். நடிகர் தனுஷ் நடிப்பில் இன்றைய தினம் மாறன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. தொடர்ந்து இவரது அடுத்தடுத்த படங்கள் திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்டவை ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

உடல்நிலை பாதித்த ஐஸ்வர்யா

உடல்நிலை பாதித்த ஐஸ்வர்யா

இதேபோல ஐஸ்வர்யா முசாபிர் என்ற இசை ஆல்பத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்த ஆல்பம் 4 மொழிகளில் உருவாகி வருகிறது. விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தமிழில் பயணி என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதனிடையே அவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மனஉளைச்சல் காரணமா?

மனஉளைச்சல் காரணமா?


மகளிர் தினத்தைக்கூட மருத்துவமனையில் செவிலியர்களுடன் கொண்டாடினார் ஐஸ்வர்யா. இவரது உடல்நலக் குறைவுக்கு அவரது மன உளைச்சலே காரணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர் உடல்நிலை தேறியுள்ளார். இதையடுத்து மீண்டும் தனது பணிக்கு அவர் திரும்பியுள்ளார்.

முசாபிர் ப்ரமோ வெளியீடு

முசாபிர் ப்ரமோ வெளியீடு

இந்நிலையில் இந்த வீடியோவின் ப்ரமோ மற்றும் வொர்க்கிங் ஸ்டில்களை அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மீண்டும் வேலைக்கு திரும்பியது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்களில் அவர் மிகவும் தீவிரமாக தன்னுடைய இயக்கப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X