Don't Miss!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- News குலுங்கியது திருப்பரங்குன்றம்.. முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம்.. பரவசத்தில் பூரித்த மதுரை
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
3 நாள் நடந்த அதிரடி ரெய்டு.. சோனு சூட் ரூ. 20 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை பரபரப்பு!
மும்பை: பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் ரூ. 20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
வருமான வரி ஏய்ப்பில் நடிகர் சோனு சூட் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர்.
ஆம் ஆத்மி கட்சியில் சோனு சூட் இணையவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்த அதிரடி சோதனை நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.
கொரோனா காலத்தில் உதவி
அருந்ததி, ஒஸ்தி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் நடிகராக நடித்த சோனு சூட் கடந்த ஒன்றாரை ஆண்டுகளாக கொரோனாவில் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பெரும் உதவிகளை செய்து சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்றார். இந்நிலையில், அவர் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
3 நாள் சோதனை
மும்பையில் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ஏகப்பட்ட ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் வரி ஏய்ப்பு செய்திருப்பது உறுதியாகி உள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
20 கோடி மோசடி
பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் கிரவுட் ஃபண்டிங் மூலமாக கொரோனா உதவி செய்வதற்காக உலக நாடுகளில் இருந்து பலரிடமும் பணம் வாங்கி வந்த நிலையில், தற்போது அவரது இல்லத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித்துறையினர் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளனர்.
ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன்
லக்னோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் கூட்டு வைத்து இந்த மோசடியில் நடிகர் சோனு சூட் ஈடுபட்டதாக வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து ஒரே நேரத்தில் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களிலும் அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ரியல் எஸ்டேட் நிறுவனம் 65 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பழிவாங்கும் நடவடிக்கையா
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சமீபத்தில் நடிகர் சோனு சூட் சந்தித்திருந்தார். அந்த கட்சியில் சோனு சூட் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் தான் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை என பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தீவிர விசாரணை
சுமார் 20 கோடி வரையிலான வரி ஏய்ப்பு நடைபெற்றது தொடர்பான ஆதாரங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றிய நிலையில், இது தொடர்பாக நடிகர் சோனு சூட்டிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வருமான வரித்துறையினர் சோதனை குறித்து நடிகர் சோனு சூட் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் விளக்கத்தையும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கணவனுக்கும் மனைவிக்கும் இதுல கூட போட்டியா?.. ராம்சரண் - உபாசனா சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?
-
ஒரு ஊருக்கே கிடா விருந்து.. மகள், மாப்பிள்ளைக்கு தடபுடலாக வந்த உணவு.. அமர்களப்படுத்திய ரோபோ ஷங்கர்!
-
சேஷு உயிரிழக்க காரணமே இதுதான்.. அவர்கிட்ட இருந்து இதை மட்டும் கத்துக்காதீங்க.. நடிகர் பழனி பகீர்!