படத்தில் தான் நடக்குது, நிஜத்தில் இல்லையே: ஃபீல் பண்ணும் சூப்பர் ஸ்டார்

By Siva

மும்பை: என்னை பார்த்து ஒரு பெண் கூட அந்த வார்த்தையை சொல்லவில்லை என பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 53 வயதாகிறது. அவரும் நடிகை லூலியா வந்தூரும் காதலிப்பதாக பேசப்படுகிறது. அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய லூலியாவுக்கு சல்மான் கான் வைர மோதிரம் பரிசளித்துள்ளார். ஆனால் சல்மான் கான் தானாக அந்த மோதிரத்தை பரிசளிக்கவில்லை. தன் அம்மா கூறியதால் வாங்கிக் கொடுத்துள்ளார்.

சல்மான் கான் வாழ்வில் பல ஆண்டுகளாக காதல் வருவதும் போவதுமாக உள்ளது.

சல்மான் கான்

சல்மான் கான்

சல்மான் கான் தனது முன்னாள் காதலிகளுடன் நட்பாக உள்ளார். ஐஸ்வர்யா ராயை தவிர அனைவரிடமும் டச்சில் உள்ளார். வாழ்க்கை ரொம்ப நீளமானது இதில் எதற்காக மனதில் கோபம், வஞ்சம் எல்லாம் வைக்க வேண்டும். அதனால் தான் நான் என் முன்னாள் காதலிகளுடன் நட்பாக பழகி வருகிறேன் என்று சல்மான் தெரிவித்துள்ளார்.

கத்ரீனா

கத்ரீனா

பாரத் படத்தில் கத்ரீனா கைஃப் சல்மான் கானிடம் ப்ரொபோஸ் செய்வார். ஆனால் நிஜத்தில் யாருமே அவரிடம் அப்படி கேட்டது இல்லை. அதாவது நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று ஒரு பெண் கூட சல்மானிடம் கேட்டது இல்லையாம். நான் கேன்டில் லைட் டின்னர்களுக்கு செல்லாததால் அப்படி நடக்கவில்லை போன்று. ஒரு பெண் கூட நம்மிடம் கேட்கவில்லையே என்ற வருத்தம் இருக்கத் தான் செய்கிறது என்கிறார் சல்மான்.

சல்மா

சல்மான் கானுக்கு தன் அம்மா சல்மா என்றால் உயிர். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் அம்மாவை அழைத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு செல்வது, அவருடன் சேர்ந்து டான்ஸ் ஆடுவது என்று உள்ளார் சல்மான். தன் அம்மாவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை சல்மான் அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்து இம்பிரஸ் ஆகாத பெண்களே இல்லை எனலாம்.

உடன் பிறப்புகள்

உடன் பிறப்புகள்

சல்மான் கானுக்கு தனது குடும்பம் தான் முக்கியம். தம்பிகள், தங்கைகள், அவர்களின் பிள்ளைகளை பாசமாக பார்த்துக் கொள்கிறார். தங்கை அர்பிதாவின் மகன் அஹிலுடன் சேர்ந்து வீடியோ, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் சல்மான் கான். சல்மான் தற்போது பிரபுதேவாவின் இயக்கத்தில் தபாங் 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X