Bigg Boss 7 - வறுத்தெடுக்கப்பட்ட கமல்.. ஒதுங்கிய சிம்பு?.. பிக்பாஸை தொகுத்து வழங்க இத்தனை பேர் லிஸ்ட்டிலா?
சென்னை: Bigg Boss Kamal Haasan (பிக்பாஸ் கமல் ஹாசன்) பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமல் ஹாசன் விலகுவதாக ஒரு தகவல் சமீபமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நடந்துவருகிறது. எந்த சீசனிலும் இல்லாத அளவு இந்த சீசனில் கமல் ஹாசனின் பெயர் ரொம்பவே டேமேஜ் ஆகியிருக்கிறது.

முதலில் அதற்கான விதை போட்டது பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட விவகாரம்தான். அவர் வீட்டுக்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி வெளியேற்றப்பட்டார்.
நியாயமா ஆண்டவரே: கமல் ஹாசன் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவின் இந்த முடிவு கடும் கண்டனங்களை சந்தித்தது. அவரை தாண்டியும் நிக்சன் மோசமாக ஐஷுவிடம் நடந்துகொண்டார்; வினுஷா, பூர்ணிமா ஆகியோரின் உடலை வைத்து வர்ணித்தார்; பூர்ணிமா மற்றும் மாயா என்னென்னமோ செய்கிறார்கள். அவர்களை எல்லாம் ஏன் வெளியேற்றவில்லை என்ற கேள்வி எழுந்தது.
சொருகிடுவேன்: உச்சக்கட்டமாக கடந்த வாரம் நிக்சனுக்கும் அர்ச்சனாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அர்ச்சனாவை பார்த்து, நீலாம் ஒரு பொண்ணா; ச்சீ மூஞ்ச பாரு; சொருகிடுவேன் என எக்குத்தப்பாக பேசினார். அதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக நிக்சனை கமல் ஹாசன் கண்டித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
புஸ்வானமான கமல்: எனவே கடந்த வாரம் சனிக்கிழமை கமல் ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தபோது தரமான சம்பவம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வந்தவரோ வேட்டையாடு விளையாடு ஸ்டைலில் பேசிவிட்டு ஒரு ஸ்ட்ரைக் கார்டை மட்டும் தூக்கி காண்பித்து அந்த விஷயத்தை கடந்தவிட்டார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பெயர் டேமேஜ்: இந்த சீசன் ஆரம்பித்த சில வாரங்களிலேயே கமல் ஹாசனின் பெயர் டேமேஜ் ஆக தொடங்கியது. அதாவது அவர் மாயாவுக்கு ரொம்பவே சப்போர்ட் செய்கிறார். ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறார் என்று குரல்கள் எழுந்தன. மீம்ஸ்களும் பறந்தன. சூழல் இப்படி இருக்க நிக்சன் விவகாரம் அவரது பெயரை பாதாளத்தில் தள்ளிவிட்டது. ஏனெனில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமல் ஹாசனை பிக்பாஸிலிருந்து எவிக்ட் செய்ய வேண்டும். நிகழ்ச்சியையே ஒழுங்காக நடத்தாதவர் அரசியலில் மக்களுக்கு என்ன நல்லது செய்யப்போகிறார் என ஓபனாகவே வறுத்தெடுத்தனர்.
விலகும் கமல்: சூழல் இப்படி இருக்க இனியும் பிக்பாஸில் இருந்தால் தன் பெயரும் கட்சி பெயரும் நாறிவிடும் என நினைத்த கமல் பிக்பாஸிலிருந்து வெளியேறப்போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. கமல் விலகிவிட்டால் அடுத்ததாக சிம்பு தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் அதுகுறித்தும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி கமல் ஹாசன் விலகினால் சிம்பு தொகுத்து வழங்குவது கொஞ்சம் கஷ்டம்தானாம். ஏனெனில் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் அவர் முழு கவனத்தையும் தனது சினிமா கரியரில் செலுத்த முடிவெடுத்திருக்கிறாராம். இதனால் அவர் ஒத்துக்கொள்வதில் சந்தேகம்தான் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
சிம்பு ஒதுங்கும் மனநிலையில் இருப்பதால் அடுத்ததாக விஜய் சேதுபதி, அர்ஜுன், மாதவன், சரத்குமார் ஆகியோரிடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று லிஸ்ட் வைத்திருப்பதாக தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..


Click it and Unblock the Notifications











