Maaveeran - மாவீரன்.. ரஜினி, கமலுக்கு பதில் அந்த விஷயத்தை செய்த பிரபலம் யார்?

சென்னை: Maaveeran (மாவீரன்) மாவீரன் படத்துக்காக பிரபலம் ஒருவர் வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதன் காரணமாக அவர் கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்கள் வரிசையில் இணைந்துவிட்டார். மேலும் சிவகார்த்திகேயனை நம்பி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் போடலாம் என்ற நம்பிக்கையும் கோலிவுட் தயாரிப்பாளர்களிடம் உருவாகியிருக்கிறது.

It has been reported that a celebrity has given voice over for Maaveeran

பிரின்ஸ் சந்தித்த தோல்வி: ஆனால் பிரின்ஸ் படத்தின் ரிசல்ட் கடுமையாக சிவகார்த்திகேயனை ரொம்பவே அப்செட் ஆக்கியது. தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை வளர்க்கும் நோக்கத்தில் அனூதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் சிவாவின் கரியரில் மோசமான படம் என்ற பெயரை பெற்றது. அதுமட்டுமின்றி ரிலீஸான ஒரே வாரத்தில் படமும் திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டது.

மாவீரன்: இப்படிப்பட்ட சூழலில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். பிரின்ஸ் கொடுத்த மோசமான அனுபவத்தை மாவீரன் மூலம் மறக்கலாம் என்ற நம்பிக்கையில் அவரும் அவரது ரசிகர்களும் இருக்கின்றனர். படம் ஜூலை 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்திலிருந்து மொத்தம் இரண்டு சிங்கிள்கள் வெளியாகின. மூன்றாவது சிங்கிள் இன்று வெளியாகவிருக்கிறது.

ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்:இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு மாவீரன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அதில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், இயக்குநர் மடோன் அஷ்வின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் மிகச்சிறப்பாக இருக்கிறது என்றும் நிச்சயம் படம் ஹிட்டாகிவிடும் என்று தெரிவித்துவருகின்றனர்.

வாய்ஸ் ஓவர்: இந்நிலையில் படத்தில் ஒரு பிரபலம் வாய்ஸ் ஓவர் கொடுக்க வேண்டிய சூழல் நிலவியிருக்கிறது. இதனையடுத்து ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோரிடம் கேட்கப்பட்டதாம். ஆனால் இரண்டு பேருமே மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மற்றொரு பிரபலம் வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பதாக தெரிகிறது.

யார் அந்த வாய்ஸ் ஓவர்: இதனையடுத்து அந்த வாய்ஸ் ஓவரை சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்திய தனுஷ் கொடுத்திருக்கலாம் என பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் தனுஷ் கொடுக்கவில்லை மாறாக சிம்புவோ இல்லை சூர்யாவோ கொடுத்திருக்கலாம் எனவும் திரையுலகத்தில் இன்னொரு தகவலும் உலாவிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து படத்துக்கு எழுந்திருக்கும் எதிர்பார்ப்போடு வாய்ஸ் ஓவர் கொடுத்த அந்த பிரபலம் யார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வமும் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X