Lokesh Kanagaraj - லோகேஷ் - ரஜினி படத்துக்கு சிக்கலா?..எல்லாம் அந்த ஐந்து கோடியால் வந்தது
சென்னை: Rajini 171 (ரஜினி 171) ரஜினியும், லோகேஷ் கனகராஜும் இணையும் படத்துக்கு புதிய சிக்கல் எழுந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் தனது ஐந்தாவது படமாக லியோவை இயக்கிவருகிறார். இதற்கு முன்னர் அவர் இயக்கிய நான்கு படங்களும் வரிசையாக ஹிட்டடித்துள்ளன. இதன் காரணமாக லியோவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர். லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.லியோ படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் என்ன படம் இயக்கப்போகிறார் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
கைதி 2,தலைவர் 171: லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கைதி 2 படத்தை இயக்குவது உறுதியாகியிருக்கிறது. ஆனால் அந்தப் படத்துக்கு முன்னதாகவே ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குவார் என பரவலாக பேசப்பட்டது. அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் இயக்குநர் மிஷ்கின், லோகேஷ் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் செய்யப்போகிறான் என்றார்.லியோவில் அவர் ந்டித்திருப்பதால் மிஷ்கின் சொன்னதை அடுத்து லோகேஷ் - ரஜினி படம் உறுதி என நம்பப்படுகிறது.

கைதி 2?: கைதி படத்தின் இரண்டாம் பாகம் பணிகள் ரொம்ப நாள்களாகவே அப்படியே இருக்கின்றன. நடிகர் கார்த்தியும் அதில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் லோகேஷின் கிராஃபை பார்க்கும்போது லியோவை முடித்துவிட்டு ரஜினி படத்தை இயக்க சென்றுவிடுவார். அதனை முடித்த பிறகுதான் கைதி 2வுக்கு வருவார் என சிலர் கூறுகின்றனர். அதேசமயம், ரஜினி அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார். ரஜினி அந்தப் படத்தை முடிப்பதற்குள் லோகேஷ் கைதி 2வை முடித்துவிடலாம். எனவே அடுத்து லோகேஷ் கைதி 2வைத்தான் இயக்குவார் என்றும் பேச்சு ஓடுகிறது.
ரஜினி 171க்கு போட்டி: இதற்கிடையே ரஜினி - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தை தயாரிப்பதற்கு மொத்தம் 7 தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிப்போடுவதாக பரவலாக பேசப்பட்டது. இவற்றில் சன் பிக்சர்ஸும் ஒன்று. சன் பிக்சர்ஸுடன் ரஜினிக்கு நல்ல புரிதல் இருப்பதால் அந்த நிறுவனத்துக்கே படத்தை கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக லோகேஷ் கனகராஜுக்கு 50 கோடி ரூபாய்வரை சம்பளம் கொடுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது.
சிக்கல்: இந்நிலையில் ரஜினிகாந்த்தும், லோகேஷ் கனகராஜும் இணையும் படத்துக்கு சிக்கல் எழுந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தெலுங்கில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் பிரபாஸை வைத்து படம் இயக்க 5 கோடி ரூபாய் அட்வான்ஸை லோகேஷ் கனகராஜ் வாங்கியதாகவும்; தற்போது அந்த நிறுவனம் உங்களது அடுத்த படத்தை எங்களுக்கு செய்துகொடுங்கள் என வலியுறுத்திவருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்து என்ன செய்யலாம் என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.


Click it and Unblock the Notifications











