Kanguva - லியோவுக்கு டஃப் கொடுக்கும் கங்குவா.. 1500 பேருடன் பாடல் காட்சி

சென்னை: Kanguva (கங்குவா) கங்குவா படத்தின் பாடல் காட்சி ஒன்று 1500 பேரை வைத்து படமாக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

முன்னணி நடிகரான சூர்யா தற்போது கதை தேர்வு சிறப்பாக இருக்கிறது. அவரது கரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது ஜெய் பீம். ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான அந்தப் படம் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. அதேபோல் சூர்யாவுக்கும் மிகச்சிறந்த பெயரை ஜெய் பீம் பெற்றுக்கொடுத்தது. மேலும் அவர் நடித்த சூரரைப் போற்று படம் தேசிய விருதையும் வென்றது.

கங்குவா: ஜெய் பீம் படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42ஆவது நடித்துவருகிறார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பெரும் பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரிக்கிறார். 10 மொழிகளில் 3டியில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் சரித்திர கால கதையாக உருவாகியிருக்கிறது. திஷா பதானி கதாநாயகியாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்துக்கு கங்குவா என பெயரிடப்பட்டுள்ளது.

It has been reported that a song sequence of Kanguva is being shoot with 1500 people

கங்குவா அர்த்தம் என்ன?: படத்தின் பெயர் பெரும் வரவேற்பைப் பெற்றாலும்; ரஜினி நடித்த Gangwa என்ற படத்தின் பெயரை சற்று மாற்றி கங்குவா என பெயரிடப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்தது. அதேபோல் படத்தின் பெயருக்கு என்ன அர்த்தம் என்பது குறித்தும் ரசிகர்கள் விவாதித்தனர். அதனையடுத்து, கங்குவா என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என படத்தின் இயக்குநர் சிவா விளக்கமளித்திருந்தார்.

இரண்டு பாகங்கள்: இதற்கிடையே கங்குவா படம் 2 பாகங்களாக வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் இரண்டாவது பாகத்துக்கான லீட் இருக்கும் என்று தெரிகிறது. நவம்பரில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த வருடத் தொடக்கத்தில் முதல் பாகம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விறுவிறு ஷூட்டிங்: கங்குவா படத்தின் ஷூட்டிங் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடந்துவந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதுதான் படத்தின் க்ளைம்கேஸ்க்கான ஷூட்டிங் என்றும் பேச்சு ஓடியது. படத்தை விரைவில் முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இறங்குவதற்கு இயக்குநர் சிறுத்தை சிவா ஆயத்தமாகியிருப்பதால் பயங்கர விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்தது. கொடைக்கானலில் கடந்த மாதம் ஷூட்டிங் நடந்து முடிந்தது.

சென்னையில் ஷூட்டிங்: கொடைக்கானல் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னையில் அடுத்தக்கட்ட ஷூட்டிங் நடத்தப்படும் என தகவல் வெளியானது. அதன்படி இப்போது சென்னைக்கு அருகில் பிரமாண்ட செட் போட்டு பாடல் காட்சி ஒன்றை படமாக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும்; அந்தப் பாடலில் 1500 நடன கலைஞர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது

லியோவுக்கு டஃப்: இதற்கிடையே விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் லியோ படத்தில் நா ரெடிதான் என்ற பாடல் இடம்பெற்றிருக்கிறது. அந்தப் பாடலில் விஜய்யுடன் 1000க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் ஆடியிருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இப்போது கங்குவாவிலும் 1500 டான்ஸர்கள் ஆடவிருப்பதாக கூறப்படுவதால் லியோவுக்கு கங்குவா டஃப் கொடுக்கிறது என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X