Tamannaah - கறார் காட்டும் தமன்னா.. ரொம்ப ஓவராத்தான் போறாங்க - முணுமுணுக்கும் திரைத்துறை
சென்னை: Tamannaah (தமன்னா) நடிகை தமன்னா சம்பள விஷயத்திலும் மற்ற விஷயத்திலும் ஓவர் கறார் காட்டுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ்,தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா இப்போது பாலிவுட்டில் தனது திறமையால் வளர்ந்திருக்கிறார். பப்ளி பவுன்சர், ப்ளான் ஏ ப்ளான் பி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் சமீபத்தில் ஜீ கர்தா வெப் சீரிஸில் நடித்திருந்தார். அமேசான் ப்ரைமில் ஜீ கர்தா வெப் சீரிஸ் வெளியானது. அந்த வெப் சீரிஸ் கதைக்காக பேசப்பட்டதோ தமன்னாவின் கவர்ச்சி, நெருக்கமான காட்சிகளுக்காக ரசிகர்களால் ரொம்பவே பேசப்பட்டது.
லஸ்ட் ஸ்டோரிஸ் 2: இதனையடுத்து அவர் நடித்திருக்கும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆந்தாலஜி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது. சுஜோய் கோஷ் இயக்கியிருக்கும் கதையில் விஜய் வர்மாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக ஆந்தாலஜி டீசண்ட்டான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும் தமன்னா இதிலும் கவர்ச்சியாகவே நடித்திருக்கிறார்.

ஏன் இப்படி?: இதற்கிடையே தமன்னாவுக்கு ஹாலிவுட் ஆசை வந்துவிட்டது அதனால்தான் தொடர்ச்சியாக கவர்ச்சியாக நடிக்கிறார் என்று ஒரு தரப்பினர் கூறினர். ஆனால் அதை மறுத்த தமன்னா, 'நான் முத்தக் காட்சியில் நடிப்பதை முன்பெல்லாம் விரும்பியதில்லை. ஆனால் இப்படி நடிப்பதற்கு 18 வருடங்களை கடந்திருக்கிறேன். குறிப்பாக இந்தக் கதைக்கு முத்தக் காட்சி தேவைப்பட்டது. லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் எனது கதையை இயக்கிய சுஜோய் கோஷ் நல்ல இயக்குநர். ஹாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற காட்சிகளில் நான் நடிக்கவில்லை' என விளக்கமளித்திருந்தார்.
ஜெயிலர்: பாலிவுட்டில் பிஸியாக இருந்தாலும் தமிழிலும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் அவர். அவரது ஆசையை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ஜெயிலர் படமும், சுந்தர்சி இயக்கவிருக்கும் அரண்மனை 4ம் நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும். சூழல் இப்படி இருக்க சம்பள விஷயத்திலும் மற்ற விஷயத்திலும் தமன்னா ஓவர் கறார் காட்டுவதாக கூறப்படுகிறது.
என்ன செய்கிறார்?: தமன்னா இப்போது ஒரு படத்துக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். அந்தத் தொகையில் ஒரு லட்சம் ரூபாயை குறைத்து பேசினால்கூட படத்தில் நடிக்க முடியாது என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிடுகிறாராம். தமிழில் மார்க்கெட்டே இல்லாதபோது அதையெல்லாம் உணராத தமன்னா இப்படி கறார் காட்டக்கூடாது என்கின்றனர் திரைத்துறையினர்.
சம்பளம் மட்டுமில்லை: அதேபோல் சம்பளத்தில் மட்டுமில்லாமல் இன்னும் சில விஷயங்களிலும் அவர் ஸ்ட்ரிக்ட்டாக இருக்கிறார். அதாவது தன்னுடன் வரும் ஏழு உதவியாளர்களுக்கும் ஒருநாளைக்கு ஒன்றரை லட்சம் செலவு ஆகும். அதையும் தயாரிப்பாளரே கொடுக்க வேண்டும். அதேபோல் விமானத்தில் எனக்கு பக்கத்து இருக்கையையும் புக் செய்ய வேண்டும். அப்போதுதான் யாரும் எனது அருகில் அமரமாட்டார்கள் என்றும் கூறுகிறாராம். இதையெல்லாம் கேட்ட கோலிவுட் இந்த கண்டிஷன் எல்லாம் ரொம்ப ஓவர் என முணுமுணுக்கிறது.


Click it and Unblock the Notifications











