Trisha - என்னது த்ரிஷாவுக்கு திருமணமா?.. வெளியான புதிய தகவல்.. இதுலயாவது உண்மை இருக்குமா?
சென்னை: Trisha Marriage (த்ரிஷா திருமணம்) நடிகை த்ரிஷாவுக்கு பிரபல தயாரிப்பாளருடன் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மிஸ் சென்னை பட்டம் வென்றதன் மூலமாக பிரபலமானவர் த்ரிஷா. அதனையடுத்து ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சில சீன்களில் தலை காட்டியவர் லேசா லேசா படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் வெளியாவதற்குள் மௌனம் பேசியதே படத்தில் கமிட்டாகிவிட்டார் த்ரிஷா. எனவே அவர் கமிட்டான முதல் படம் லேசா லேசா ஆனால் முதலில் ரிலீஸான படம் மௌனம் பேசியதே.

மௌனம் பேசியதே: அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் த்ரிஷா. குறிப்பாக சூர்யாவிடம், தனியாவா பேசலாமே என அவர் சொல்வது ரசிகர்களின் மொபைலில் பல வருடங்களுக்கு இருந்தது. மௌனம் பேசியதே படத்துக்கு பிறகு தொடர்ந்து வெளியான படங்கள் ஹிட்டடிக்க முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
கனவுக்கன்னி த்ரிஷா: அதனையடுத்து விஜய், அஜித், சூர்யா என பலருடன் ஜோடி போட்டார். குறிப்பாக, 2004ஆம் ஆண்டு விஜய்யுடன் கில்லி படத்தில் நடித்தார். தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படத்திலிருந்து த்ரிஷா ரசிகர்களின் மனதை கவர்ந்த கனவுக்கன்னியாக மாறினார். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாகவும் விஜய் - த்ரிஷா ஜோடி மாறியது.
மீண்டும் விஜய்யுடன்: 2002ஆம் ஆண்டிலிருந்து இப்போதுவரை தொடர்ந்து லைம் லைட்டில் இருக்கும் த்ரிஷா டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். இதற்கிடையே பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் குந்தவையாக கலக்கியிருந்தார் த்ரிஷா. அடுத்ததாக லியோ படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நோ திருமணம்: இப்படி மீண்டும் லைம் லைட்டிற்கு வந்திருக்கும் த்ரிஷாவுக்கு தற்போது வயது 40 ஆகும். ஆனால் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.ஏற்கனவே தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தாலும் ஏதோ காரணத்தால் அந்த நிச்சயதார்த்தம் திருமணம்வரை செல்லாமல் நின்றுவிட்டது.
த்ரிஷாவுக்கு திருமணம்: பொன்னியின் செல்வன் பட ப்ரோமோஷனின்போது திருமணம் குறித்து த்ரிஷாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த த்ரிஷா திருமணத்துக்கு பிறகான விவாகரத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது த்ரிஷா திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி த்ரிஷாவுக்கு பிரபல தயாரிப்பாளருடன் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தயாரிப்பாளர் தெலுங்கு திரையுலகமா இல்லை தமிழ் திரையுலகமா என்று தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. அதேசமயம் இந்தத் தகவலில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்றும் தெரியவில்லை எனவும் திரையுலகில் ஒருதரப்பினர் சொல்கின்றனர்.


Click it and Unblock the Notifications











