இயக்குநர் மகிழ் திருமேனியை டார்ச்சர் செய்கிறாரா அஜித்?.. கோலிவுட்டில் பரபரக்கும் தகவல்
சென்னை:இயக்குநர் மகிழ் திருமேனிக்கு உலக பட சிடிக்களை கொடுத்து அஜித் பார்க்க சொல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு வெளியான துணிவு படம் நல்ல வெற்றியை பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாக ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தவில்லை என்றாலும் வசூல் ரீதியாக படம் சக்கைப்போடு போட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி முதல் இரண்டு படங்களில் இல்லாமல் இருந்த ஹெச்.வினோத்தின் டச் துணிவு படத்தில் இருந்ததாக ரசிகர்கள் கூறினர்.

ஏகே 62வில் கமிட்டான அஜித்
துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் சொன்ன முழு கதை பிடிக்காமல் போக அவர் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அஜித்தின் 62ஆவது படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்ததுஜ்.

ஏகே 62வை இயக்கும் மகிழ் திருமேனி
ஏகே 62 படத்தை யார் இயக்குவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. ஆனால் அந்தப் படத்தை இயக்கப்போவது மகிழ் திருமேனிதான் என ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது. படத்துக்கு அனிருத் இசையமைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படம் பக்கா ஆக்ஷன் கதையாக தயாராகவிருப்பதாகவும், லியோ படத்தை பீட் செய்யும் அளவுக்கு இருக்கும் எனவும் அஜித் ரசிகர்கள் கூறுகின்றனர்.

பட அறிவிப்பு தாமதம்?
நிலைமை இப்படி இருக்க ஏகே 62 குறித்த அறிவிப்புக்கு வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர் ஏகே ரசிகர்கள். ஆனால் அதுகுறித்த சிறு அசைவுக்கூட இதுவரை தென்படவில்லை. சமீபத்தில் லைகாவிலிருந்து வெளியான அறிவிப்பும் ரஜினி - த.செ.ஞானவேல் இணையும் படம் குறித்த அறிவிப்பாக அமைந்துவிட்டது. நிலைமை இப்படி இருக்க அஜித் படத்தின் அறிவிப்பு தாமதமாதவதற்கு புதிதாக காரணம் ஒன்று சொல்லப்படுகிறது.

தாமதமாவதற்கு காரணம் என்ன?
அதாவது ஏகே 62வுக்காக மகிழ் திருமேனி மொத்தம் மூன்று கதைகளை சொன்னாராம். மூன்று கதைகளும் அஜித்திற்கு பிடித்துப்போனாலும் தன்னிடம் இருக்கும் சில ஆக்ஷன் கலந்த உலக திரைப்படங்களின் சிடிக்களை அஜித் கொடுத்து இதை ரெஃபரன்ஸாக வைத்துக்கொண்டு ஒரு கதையை உருவாக்கும்படி கூறுகிறாராம். அவர் பேச்சை தட்ட முடியாமல் மகிழ் திருமேனியும் அந்தப் படங்களை பார்த்ததாகவும், ஆனால் அது அவருக்கு திருப்தி அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அஜித்திடம் தனது கதைகளையே படமாக்கலாம் என அவர் கூறியதாகவும் அதற்கு அஜித் தாமதமாகவே ஒத்துக்கொண்டார். அதனால்தான் ஏகே 62 படத்தின் அறிவிப்புக்கு இவ்வளவு தாமதம் என ஒரு தகவல் கோலிவுட்டில் உலா வருகிறது.

அஜித்தின் பைக் ரைட்
இதற்கிடையே அஜித் தனது இரண்டாவது சுற்று உலக பைக் ரைடை ஆரம்பிக்கவிருக்கிறார். இதுகுறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், "லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது" என சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











