Anirudh And Simbu - சிம்பு படத்துக்கு இசையமைக்க மறுத்த அனிருத்?.. இன்னுமா பகை முடியல?.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: Anirudh (அனிருத்) சிம்பு படத்துக்கு அனிருத் இசையமைக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தனிப்பட்ட சில பிரச்னைகள் காரணமாக சிம்பு திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தார். ஒருவழியாக எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. எனவே தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் தடுமாறுவாரோ என ரசிகர்கள் கவலை கொள்ள ஆரம்பித்தனர்.

It has been reported that Anirudh has refused to compose music To Simbu 48th Movie

நூறு கோடி ரூபாய் க்ளப்: இப்படிப்பட்ட சூழலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அரசியல் களத்தையும், டைம் லூப் கான்செப்ட்டையும் மையமாக வைத்து படம் உருவாகியிருந்தது. சிம்புவின் எனர்ஜியான நடிப்பு, வெங்கட் பிரபு அசாத்தியமான திரைக்கதை ஆகியவை இணைந்து படத்தை மெகா ஹிட்டாக்கின. மேலும் படமானது நூறு கோடி ரூபாயை வசூலித்து அசத்தியது.

வெந்து தணிந்தது காடு: இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக சிம்புவின் நடிப்பை பார்த்த பலரும் சிறந்த நடிகர் என்பதை சிம்பு உணர்த்திவிட்டார் என புகழ்ந்தனர். தொடர்ந்து நடித்த பத்து தல படம் சறுக்கியது. கன்னட படமான மஃப்டி படத்தின் ரீமேக்காக அது அமைந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வரிசையாக இரண்டு ஹிட் கொடுத்த எஸ்டிஆர் மூன்றாவது படத்தில் சறுக்கியது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட்.

கமல் தயாரிப்பில்: தற்போது தனது 48ஆவது படத்தில் நடிக்க கமல் ஹாசன் தயாரிப்பில் கமிட்டாகியிருக்கிறார். படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். பத்து தல படத்தில் ஏற்பட்ட சறுக்கலை இந்தப் படத்தின் மூலம் சரி பண்ணிவிடலாம் என்ற முனைப்பில் சிம்பு பணியாற்றவிருக்கிறார்.

வேற லெவல் கெட்டப்: இந்தப் படத்துக்காக சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளை கற்றுவருவதாக கூறப்படுகிறது. மேலும் ஜிம்மில் பயங்கரமாக ஒர்க் அவுட் செய்து நீண்ட தாடி மற்றும் முடியுடனும் காட்சியளிக்கிறார். இதன் காரணமாக கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் சிம்பு தரமான சம்பவம் செய்யப்போகிறார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

It has been reported that Anirudh has refused to compose music To Simbu 48th Movie

மறுத்த அனிருத்?: இந்நிலையில் இந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி எஸ்டிஆர் 48க்கு இசையமைக்க அனிருத்திடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாம். ஆனால் இன்னும் ஆறு மாதங்களுக்கு நான் பயங்கர பிஸி என்று அனிருத் கழற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சிம்பு படத்துக்கு அனிருத் இசையமைக்காமல் இருக்க ஒரு வேளை தனுஷுக்கும் சிம்புவுக்கும் இருக்கும் போட்டிதான் காரணமாக இருக்குமோ என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

அதேசமயம் இது காரணமாக இருக்காது உண்மையில் அனிருத் பிஸியாகத்தான் இருக்கிறார். அவரது இசையமைப்பில் இன்னும் லியோ, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. அதுமட்டுமின்றி தலைவர் 171 படத்திலும் அவர் கமிட்டாகியுள்ளார். எனவேதான் அவரால் இசையமைக்க முடியாமல் போயிருக்கும் என்று அனி ரசிகர்கள் கூறிவௌர்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X