Vijay Sun Tv - விஜய் பற்றிய அட்லீ பேச்சு எடிட்.. அட்லீ உறவினரோடு விஜய்க்கு இருக்கும் பஞ்சாயத்து காரணமா?
சென்னை: Vijay Sun Tv (விஜய் சன் டிவி) விஜய் பற்றி அட்லீ பேசிய பேச்சு எடிட் செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் அட்லீயின் உறவினரே இருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது.
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி தமிழில் முன்னணி இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார். முதன்முறையாக ஹிந்தியில் அதுவும் முதல் படத்திலேயே ஷாருக்கானை வைத்து எண்ட்ரி ஆவதால் இந்தப் படத்தை ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற பெரும் ஆவலில் உழைத்திருக்கிறார் அட்லீ.

பட ரிலீஸ்: ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படமானது செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகிறது. அதற்கான ப்ரீ டிக்கெட் புக்கிங் தொடங்கி விரைவில் தீர்ந்துவருவதாக திரையரங்க உரிமையாளர்கள் வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே படத்தின் ட்ரெய்லரும் அட்டகாச வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்: யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சென்னையில் இருக்கும் சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதன் மூலம் தமிழ்நாட்டில் படத்தை எளிதாக போனி செய்துவிடலாம் என்ற கணக்கை போட்டிருக்கிறது படக்குழு. அதற்காகத்தான் ஷாருக்கானும் எந்த தயக்கமும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனம் ஆடியும், பேசிவிட்டும் சென்றார்.
அட்லீ பேச்சு: அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அட்லீ விஜய் குறித்து ஏகத்துக்கும் புகழ்ந்து பேசினார். "ஜவான் படம் நடப்பதற்கு காரணமே விஜய் அண்ணாதான். நாமெல்லாம் விஜய்யின் உண்மையான ரசிகன் கொடுத்த வாக்கை மீறமாட்டோம். என்னை கம்ஃபோர்ட் ஜோனிலிருந்து வெளியே கொண்டு வந்ததே விஜய் அண்ணன்தான்" என விஜய் மீது தனக்கு இருக்கும் பாசத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார் அட்லீ.
எடிட் செய்யப்பட்ட பேச்சு: அட்லீ அவ்வாறு பேசவில்லை என்றால்தான் ஆச்சரியம் என ரசிகர்கள் கூறிக்கொண்டிருக்க சைலெண்ட்டாக இன்னொரு சம்பவம் நடந்தது. அதாவது இந்த நிகழ்ச்சியை சன் டிவி ஒளிபரப்பியது. அதில் விஜய் பற்றி அட்லீ பேசிய எந்த விஷயமும் ஒளிபரப்பாகவில்லை. அட்லீ மட்டுமின்றி ஷாருக், ப்ரியாமணி என பலரும் விஜய் குறித்து பேசியிருந்தது ஒளிபரப்பாகவில்லை. இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமானது.
சன் டிவி விளக்கம்: நிலைமை பூதாகரமானதை உணர்ந்துகொண்ட சன் டிவி இதுகுறித்து ஒரு ட்வீட்டை பதிவு செய்தது. அதில், ஜவான் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவை கொண்டாடினீர்களா. அந்த நிகழ்ச்சியை தயாரித்ததும் எடிட் செய்ததும் கோகுலம் மூவிஸ் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இதற்கும் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மறைமுகமாக சன் டிவி உணர்த்தியிருக்கிறது.
புதிய தகவல்: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸை ஈவெண்ட்டை நடத்தியது கபிலன் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனம். அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் விஜய் டிவி மகேந்திரனின் (கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்) நண்பர்களாம். இதற்கிடையே அவர் அட்லீயின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக ராஜ்கமல் நிறுவனத்திலிருந்து விஜய்யிடம் டேட் கேட்டதாகவும் அதற்கு விஜய் கொடுக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கோபம் மகேந்திரனுக்கு இருந்துகொண்டே இருந்ததாம். சூழல் இப்படி இருக்க தமிழ்நாட்டில் ஜவான் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டை நடத்தலாம் என முடிவான பிறகு அட்லீயின் ஏற்பாட்டில் அந்த ஈவெண்ட் நடத்தும் பொறுப்பு கபிலன் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துக்கு சென்றிருக்கிறது. ஈவெண்ட் நடத்துவதற்கான செலவுக்குண்டான பணத்தை மட்டும் கோகுலம் மூவிஸ் கொடுத்திருக்கிறது.
ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டை நடத்துவது மட்டுமின்றி அந்த நிகழ்ச்சியை எடிட் செய்து கோகுலத்திடம் கொடுத்ததும் கபிலன் நிறுவனம்தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டேட்ஸ் விஷயத்தில் ஏற்கனவே விஜய் மீது கடுப்பில் இருந்த மகேந்திரன் விஜய்யை புகழ்ந்து பேசிய அத்தனை பேரின் பேச்சையும் எடிட்டில் தூக்கிவிட வேண்டும் என ஆர்டர் போட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.


Click it and Unblock the Notifications











