Jailer - ஜெயிலர் தாக்கம்.. விஜய்யை தொடர்ந்து நெல்சனுக்கு கமலிடமிருந்து வந்த ஃபோன் கால்

சென்னை: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து நெல்சன் திலீப்குமாருக்கு கமல் ஹாசன் ஃபோன் செய்து பாராட்டியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜெயிலர் படம் கடந்த பத்தாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 900 திரைகளிலும், உலக அளவில் 4000 திரைகளிலும் ஜெயிலர் திரையிடப்பட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாக நிச்சயம் ஜெயிலர் படம் பல படங்களின் வசூல் சாதனைகளை அடித்து நொறுக்கும் என ஆரூடம் கூறப்பட்டது.

It has been reported that Kamal Haasan called Nelson Dilipkumar and congratulated him after the success of Jailer

பாஸிட்டிவ் விமர்சனம்: படத்தை பார்த்த ரசிகர்கள் ஜெயிலர் படத்துக்கு பாஸிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்திருக்கின்றனர். ரஜினியை க்ளாஸாகவும், மாஸாகவும் நெல்சன் திலீப்குமார் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்றும்; தன்னுடைய ஸ்டைலையும் வைத்துக்கொண்டு ரஜினிக்கான ஸ்டைலிலும் படத்தை எடுத்து அதகளம் செய்துவிட்டார் என்றும் ரசிகர்கள் ஏகத்துக்கும் புகழ்ந்துவருகின்றனர்.

வசூல் வேட்டை: படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 49 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் இன்னமும் அதிகரிக்கவே செய்தது. குறிப்பாக அமெரிக்காவில் முதல் நாளிலேயே வாரிசு படத்தின் மொத்த வசூலையும் ஜெயிலர் வாரி எடுத்துவிட்டது. அதேபோல் படம் வெளியாகி இன்றோடு நான்கு நாட்கள் நிறைவடைந்திருக்கும் சூழலில் இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.

It has been reported that Kamal Haasan called Nelson Dilipkumar and congratulated him after the success of Jailer

கம்பேக் கொடுத்த நெல்சன், ரஜினிகாந்த்: இதனால் ரஜினியின் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். அதிலும் வரிசையாக இரண்டு படங்கள் தோல்வி படங்களாக கொடுத்த தலைவர் ரஜினியும், பீஸ்ட் படத்தால் ரொம்பவே நக்கல் செய்யப்பட்ட நெல்சன் திலீப்குமாரும் ஜெயிலர் மூலம் தரமான கம்பேக் கொடுத்துவிட்டனர் என சமூக வலைதளங்களில் பலரும் கூறுகின்றனர்.

பிரபலங்களின் வாழ்த்து: இந்நிலையில் ஜெயிலர் படம் வெற்றியடைந்ததை அடுத்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமாருக்கு ஃபோன் செய்து கலக்கிட்ட நெல்சா என வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். அதேபோல் இப்போது நடிகர் கமல் ஹாசனும் நெல்சன் திலீப்குமாருக்கு ஃபோன் செய்து படம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

It has been reported that Kamal Haasan called Nelson Dilipkumar and congratulated him after the success of Jailer

அடுத்த படம்: நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக தனுஷை வைத்து இயக்கப்போவதாகவும் அதனை கமல் ஹாசன் தயாரிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X