Bigg Boss 7 - பிக்பாஸால் ஆட்டம் காணும் அரசியல் அஸ்திவாரம்?.. வெளியேறுகிறாரா கமல் ஹாசன்?.. பரபர தகவல் உள்ளே

சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை கமல் ஹாசன் நிறுத்தப்போவதாகவும் புதிய தொகுப்பாளரை நிகழ்ச்சி குழு உறுதி செய்துவிட்டதாகவும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தமிழ்நாட்டில் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்து தற்போது ஏழாவது சீசன் நடந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய ஹைலைட்டாக கருதப்படுவது கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதுதான். அதனால்தான் அவரை விடாமல் நிகழ்ச்சி குழு தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. வாரா வாரம் சனி, ஞாயிறு கிழமைகளில் போட்டியாளர்களிடம் கமல் பேசுவார். அந்த நாட்களில் நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறுவது குறிப்பிடத்தக்கது.

It has been reported that Kamal Haasan will stop hosting Bigg Boss

சர்ச்சை கமல்: இதுவரை அவர் தொகுத்து வழங்கிய சீசன்களிலேயே இந்த சீசனில்தான் அவரது பெயர் டேமேஜ் ஆக தொடங்கியிருக்கிறது. அதற்கு முதல் விதை போட்டது பிரதீப் ஆண்டனி விவகாரம். அதாவது அவர் வீட்டுக்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காரணம் காட்டி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இது கடும் கண்டனத்தை பெற்றது. ஏனெனில் பிரதீப்பைவிட மோசமாக நடந்துகொள்ளும் நிக்சன், மாயா, பூர்ணிமா ஆகியோர் இன்னும் வீட்டுக்குள்தான் இருக்கிறார்கள்.

சொருகிடுவேன்: அதேபோல் கடந்த வாரம்கூட நிக்சன் அர்ச்சனாவை பார்த்து சொருகிடுவேன் என்று கூறினார். பூர்ணிமாவும் ஓபனாகவே கெட்ட வார்த்தை பேசினார். பல நாட்களாகவே 18 + ஜோக்குகளையும் அடித்தார். நிக்சன் அர்ச்சனாவிடம் அப்படி பேசியதை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக நிக்சனுக்கு கடும் தண்டனையை கமல் ஹாசன் கொடுப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ வேட்டையாடு விளையாடு ஸ்டைலில் பேசிவிட்டு ஒரு ஸ்ட்ரைக் கார்டை கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டார். பூர்ணிமா கெட்ட வார்த்தை பேசியதற்கு ஒரு வார்த்தையைக்கூட சொல்லவில்லை கமல் ஹாசன்.

கமலை எவிக்ட் செய்யுங்கள்: இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் என்ன இது ஆண்டவர் இப்படி செய்கிறார். பிரதீப் ஆண்டனியை வெளியேற்றியது போல் பெண்ணுக்கு எதிராக பேசிய நிக்சனையும் வெளியேற்றியிருக்க வேண்டுமே என குரல் எழுப்பும் அவர்கள். பேசாமல் கமல் ஹாசனை எவிக்ட் செய்தால் நல்லதுபோல என பேச ஆரம்பித்திருக்கின்றனர். மேலும் மீம்ஸ்களும் பறந்துகொண்டிருக்கின்றன.

விலகும் கமல்: முக்கியமாக இப்படி ஒருதலைபட்சமாக நடந்துகொள்ளும் கமல் ஹாசனா அரசியலில் நடுநிலையாக இருந்து மக்களுக்கு நல்லது செய்யப்போகிறார். ஒரு ரியாலிட்டி ஷோவில்கூட நடுநிலையாக இல்லாதவரின் கட்சி பெயர் மய்யமா என்று கிண்டல் தொனியில் கேள்விகளும் எழ ஆரம்பித்திருக்கின்றன. இது கமல் ஹாசனின் கவனத்துக்கும் சென்றிருக்கிறது.

இந்நிலையில் இந்த விமர்சனத்தை சரி செய்ய கமல் ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இனியும் இந்த நிகழ்ச்சியில் இருந்தால் நமது அரசியல் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும் என்று நினைத்துதான் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்த சீசனை முடித்துவிட்டு அடுத்தடுத்த சீசன்கள் பிக்பாஸை கமல் தொகுத்து வழங்கமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X