இரண்டாவது மாடிக்கு லிஃப்ட்.. சரி செஞ்சிட்டு கூப்பிடுங்க என்றாரா கவின்?.. பரபர தகவல்

சென்னை: கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கவினின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. இதனையடுத்து அவர் நடித்த ஸ்டார், ப்ளடி பெக்கர் ஆகிய இரண்டு படங்களுமே போதிய வரவேற்பை பெறவில்லை. சூழல் இப்படி இருக்க தற்போது அவர் கிஸ் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்றை வலைப்பேச்சு டீம் கூறியிருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கவின். சிவகார்த்திகேயன் போல் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவினுக்கு சினிமாவில் எந்த திருப்புமுனையும் ஏற்படாமல் இருந்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார். விமர்சன ரீதியாக படம் ரசிக்கப்பட்டாலும் கவினுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரும் கிடைக்கவில்லை.

kavin kiss

டாடா திருப்புமுனை: இந்தச் சூழலில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற படத்தில் நடித்தார் கவின். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா தாஸ் நடித்திருந்தார் . ஒரு கல்லூரி மாணவன் குழந்தைக்கு தந்தையாக உருவாகும் சூழலை ஒன்லைனாக வைத்துக்கொண்டு படம் உருவாகியிருந்தது. இப்படம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக கவினின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.

சொதப்பிய ஸ்டார்: டாடா படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்தார் கவின். கவினுடன் லால், அதிதி போகாங்கர் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கடந்த வருடம் ஸ்டார் திரைப்படம் வெளியானது. பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் இளன் ஏற்கனவே கவனம் ஈர்த்திருந்ததால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது.

ப்ளெடி பெக்கர்: ஸ்டார் படத்தின் தோல்வியை எதிர்பார்க்காத கவின்; அடுத்ததாக ப்ளெடி பெக்கர் படமாவது வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அந்தப் படமும் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனால் வரிசையாக இரண்டு படங்களை தோல்வி படங்களாக கொடுத்திருக்கிறார். எனவே இனி வரும் படத்தை ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் அவர். அந்தவகையில் அவர் இப்போது கிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

புதிய தகவல்: இந்நிலையில் கவின் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது கிஸ் படத்தின் ஷூட்டிங் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு கட்டடத்தில் நடந்துவருவதாகவும்; இரண்டாவது மாடிக்கு கவின் லிஃப்ட்டில் சென்றபோது அது மெதுவாக சென்றதால்; லிஃப்ட் நின்றதும் வெளியே வந்த கவின் அதனை சரி செய்துவிட்டு ஷூட்டிங்கிற்கு கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டதாக வலைப்பேச்சு பிஸ்மி தனது வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X