Leo - காசை தண்ணியா செலவழிக்கும் தயாரிப்பாளர்?.. லியோ பற்றிய லேட்டஸ்ட் தகவல் இதோ
சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படத்தின் ஒரு சண்டைக்காட்சிக்காக பல கோடி ரூபாயை தயாரிப்பாளர் லலித்குமார் செலவழித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசுக்கு கிடைத்த அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். விஜய்க்கு மாஸ்டர் பீஸ் கொடுத்த லோகேஷ் மீண்டும் அவருடன் இணைந்திருப்பதால் படம் மெகா ஹிட்டாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் அறிவிப்பின்போது வெளியான க்ளிம்ப்ஸும் உணர்த்தியது.
ஷூட்டிங்: லியோவின் ஷூட்டிங் முதல் ஷெட்யூலாக காஷ்மீரில் நடந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடுங்குளிரில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு பிரசாத் ஸ்டூடியோவில் ஷூட்டிங்கை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பையனூரில் ஷூட்டிங் முடிந்தது. இப்போது ஆதித்யராம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடக்கிறது. 2000 டான்ஸர்கள் பங்கேற்ற பாடல் காட்சி சமீபத்தில்தான் முடிவடைந்தது.

காஷ்மீரில் லியோ: இதற்கிடையே காஷ்மீரில் ஷூட்டிங் நடந்தபோது படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த மேக்கிங் வீடியோ வழக்கமாக இல்லாமல் படத்தில் பணியாற்றிய கடைநிலை ஊழியர்களை மையப்படுத்தி இருந்தது. இதன் காரணமாக அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும், லியோ படக்குழுவுக்கும் பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.
ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்தச் சூழலில் விஜய் நேற்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி லியோ படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக்கும், நா ரெடி என்ற ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கி ரத்தம் தெறிக்க சுத்தியலுடன் ஹைனா விலங்குடன் விஜய் காட்சியளித்தார். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் முதல் சிங்கிளும் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடல்தான் 2000 டான்ஸர்களுடன் விஜய் ஆடிய பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. பாடல் வரவேற்பைப் பெற்றாலும் அதில் இருக்கும் வரிகளை பலர் விமர்சித்துவருவது குறிப்பிடத்தக்கது.
சண்டைக் காட்சிக்காக இவ்வளவா?: இந்நிலையில் லியோ படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது நடைபெற்றுவருகிறது. இதுதான் படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் என்றும் கூறப்படுகிறது. இதில் பிரமாண்ட சண்டைக்காட்சியை லோகேஷ் படமாக்கிவருவதாகவும் அதற்காக மட்டும் பத்து கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது பேச்சு எழுந்திருக்கிறது.
சிங்கத்துக்கு அத்தனை கோடி: அதேபோல் படத்தில் விஜய்யுடன் சிங்கம் ஒன்று வரும். அதற்கான சிஜிக்கு மட்டும் 15 கோடி ரூபாய்வரை செலவழிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் உலாவியது.தற்போது ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள், ஹைனா விலங்கு ஏன் போஸ்டரில் இடம்பெற்றிருக்கிறது. ஒருவேளை சிங்கம் மட்டுமின்றி ஹைனா விலங்கும் படத்தில் இடம்பெற்றிருக்குமோ என்ற கேள்வியை அவர்கள் முன்வைத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











