உங்க சங்காத்தமே வேண்டாம்.. செல்வராகவன் - சிம்பு இணைந்து தயாரிப்பாளரை வெறுப்பேற்றினார்களா?

சென்னை: தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக வலம் வந்தவர் செல்வராகவன். அதேபோல் சிம்பு இடையில் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்து இப்போது மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். செல்வராகவன் அடுத்ததாக ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட படங்களை இயக்கவிருக்கிறார். அதேபோல் சிம்பு எஸ்டிஆர் 48 படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர்கள் இருவரும் இணையவிருந்த கான் திரைப்படம் ட்ராப் ஆனதற்கு இதுதான் காரணம் என்று ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

செல்வராகவன் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குநர் ஆவார். துள்ளுவதோ இளமை அவரது முதல் படம் என்றாலும் காதல் கொண்டேன் திரைப்படம்தான் அவர் முழுமையாக இயக்கிய முதல் திரைப்படம். ஏனெனில் துள்ளுவதோ இளமை திரைப்படம் பாதி நிலையில்தான் செல்வாவின் கையில் வந்தது. காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கி தனது முத்திரையை பதித்துவிட்டார் செல்வராகவன். அந்தப் படம்தான் தனுஷுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

It has been reported that Simbu and Selvaraghavan s film Kaan was dropped

தனித்துவமான இயக்குநர்: அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் உள்ளிட்ட படங்கள் க்ளாசிக் படங்களாக இன்றளவும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. செல்வராகவன் படைப்புக்கென்று பெரும்பாலானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். ஆனால் இடையில் என்ன நடந்ததோ என்று தெரியவில்லை இயக்கத்திலிருந்து மொத்தமாக ஒதுங்கி சினிமாவில் நடிப்பதில் கவனத்தை செலுத்தினார்.

மீண்டும் இயக்குநர்: அந்தவகையில் சாணிக்காயிதம், பீஸ்ட், ருத்ரதாண்டவம், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடைசியாக அவர் தனுஷின் கதையை நானே வருவேன் என்ற பெயரில் படமாக இயக்கினார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. இருந்தாலும் செல்வராகவன் மீண்டும் இயக்க வர வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க அடுத்ததாக அவர் ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 உள்ளிட்ட படங்களை இயக்கவிருக்கிறார்.

சிம்புவின் ரீ என்ட்ரி: இதற்கிடையே திறமை வாய்ந்த நடிகராக கருதப்படும் சிம்புவும் சில காரணங்களால் நடிக்காமல் இருந்தார். பிறகு உடல் எடையை குறைத்து முழு கவனத்துடன் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. பத்து தல படம் சறுக்கியது. இப்போது கமல் ஹாசன் தயாரிப்பில் தனது 48ஆவது படத்திலும், கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்திலும் நடித்துவருகிறார். அதேசமயம் கொரோனா குமார் படத்தில் நடித்துக்கொடுக்காததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்று அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்பு - செல்வராகவன் கூட்டணி: முன்னதாக செல்வராகவனும், சிம்புவும் கான் என்ற படத்தில் இணையவிருந்தார்கள். அதுகுறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் டேக் ஆஃப் ஆகவில்லை. இந்நிலையில் கான் திரைப்படம் ட்ராப் ஆனதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஷூட்டிங் தொடங்கிய முதல் இரண்டு நாட்களுக்கு சிம்பு வரவில்லை என்றும்; பிறகு சிம்பு ஷூட்டிங்கிற்கு வந்தபோது செல்வராகவன் வரவில்லை; இதனை பார்த்த தயாரிப்பாளர் இந்தப் படமே வேண்டாம் என்று அதிலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X