Simbu - மணிரத்னம் - கமல் படம்.. சிம்பு இணைவதில் சிக்கல்?.. இதுவா காரணம்?
சென்னை: Simbu (சிம்பு) கமல் ஹாசனை வைத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் சிலம்பரசன் இணைவதில் சிக்கல் எழுந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கமல் ஹாசன் சில வருடங்களுக்கு முன்னர் சினிமாவிலிருந்து ஒதுங்கி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். சினிமாவில் வென்றது போல் அரசியலிலும் பெரிய ரவுண்டு வரலாம் என்ற கமல் ஹாசனின் கணக்கு பொய்த்துப்போனது. இருப்பினும் அரசியல் சம்பந்தமாக அவ்வப்போது கருத்துக்களை கூறிவரும் அவர், கட்சி தொடர்பான கூட்டத்தையும் நடத்திவருகிறார்.
உலக நாயகனின் ரீ என்ட்ரி: சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் நடித்து ரீ என் ட்ரி கொடுத்தார். கமல் ஹாசனின் அட்டகாசமான நடிப்பு, லோகேஷ் கனகராஜின் அசத்தலான மேக்கிங் என படம் அருமையாக இருந்ததால் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 500 கோடி ரூபாய் அளவு வசூலித்தது. விக்ரம் கொடுத்த வெற்றி கமலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கும் கமிட்டாகியிருக்கிறார்.

இந்தியன் 2: அந்த வகையில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 கிடப்பில் போடப்பட்டது. அதனையடுத்து பல முயற்சிகளுக்கு பிறகு இந்தியன் 2 ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. அண்மையில் இப்படத்தின் சண்டை காட்சி ஒன்று தென் ஆப்பிரிக்காவில் படமாக்கப்பட்டது. இதன் அடுத்தக்கட்ட ஷூட்டிங் சமீபத்தில் சூரத்தில் முடிந்தது.
க்ளாசிக் கூட்டணி: விக்ரம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தை அடுத்து சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் கமல்.அந்தவகையில் படங்களை தயாரிக்கவும் செய்யும் அவர் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே கமல் ஹாசன் - மணிரத்னம் இணைந்த நாயகன் திரைப்படம் இந்தியா சினிமாவில் அழிக்க முடியாத க்ளாசிக் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு: இதற்கிடையே கமல் ஹாசனை வைத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் சிம்பு இணையவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தபோது மணிரத்னத்துக்கும், சிம்புவுக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டுவிட்டது. எனவே படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் சிம்புவை நடிக்க மணி திட்டமிட்டிருக்கிறார் என தகவல் வெளியானது.
சிக்கல்: இந்நிலையில் அந்தப் படத்தில் சிம்பு இணைவதில் சிக்கல் எழுந்திருப்பதாக புதிய பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி, தேசிங்கு பெரியசாமி படத்தில் நடிக்கும் சிம்பு தாடி வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறார். ஆனால் மணிரத்னம் படத்தின் கேரக்டருக்கோ தாடி இருக்கக்கூடாதாம். எனவே இந்தப் படத்தில் கமிட்டாகலாமா வேண்டாமா என்பது குறித்து சிம்பு யோசனையில் இருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











