பலரை வாழ வைத்த விஜயகாந்த்தா இது?.. தயாரிப்பாளர் வாழ்ந்த வீட்டை எழுதி வாங்கிய சம்பவம்
சென்னை: பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் நடிகர் விஜயகாந்த் வீட்டை எழுதி வாங்கியதாக தெரியவந்திருக்கிறது.
விஜயகாந்த் தமிழின் முன்னணி நடிகராக வலம் வந்தவர். நடிப்பு மட்டுமின்றி தேமுதிக கட்சியை தொடங்கி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்ந்தவர். தற்போது அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு முழு ஓய்வில் இருந்துவருகிறார்.

விஜயகாந்த்திற்கு மறுபெயர் உதவி
விஜயகாந்த் நடிக்கும்போதும் சரி, அரசியலில் இருந்தபோதும் சரி மற்றவர்களுக்கு அதிகம் உதவியவர். அவரது உதவும் குணம் பற்றி திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலர் சிலாகித்து பேசிவருகின்றனர். வாரிசு படத்தில் நடித்த ஷாம்கூட சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு படத்தின் தயாரிப்பாளர் தன்னை மிரட்டுவதற்காக வீட்டுக்கு ஆள்களை அனுப்பியிருந்தார். நான் விஜயகாந்த்துக்கு ஒரே ஒரு ஃப்போன்தான் செய்தேன். உடனே அந்தப் பிரச்னையிலிருந்து என்னை விடுவித்துவிட்டார் என பேசியிருந்தார். இப்படி உதவி என்றாலே விஜயகாந்த்தான் என்ற பிம்பம் இன்றுவரை இருந்துவருகிறது. அதுமட்டுமின்றி அவரால் பலர் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுவதுண்டு.

தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய கஜேந்திரா
இந்நிலையில் கஜேந்திரா படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் விஜயகாந்த் வீட்டை எழுதி வாங்கிவிட்டார் என்ற தகவல் தீயாய் பரவிவருகிறது. அதாவது பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. கஜேந்திரா படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் தயாரிப்பாளர் துரைக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

தயாரிப்பாளரிடம் வீட்டை எழுதி வாங்கிய விஜயகாந்த்
இதனால் விஜயகாந்த்துக்கு பேசிய சம்பளத்தை கொடுக்க முடியவில்லையாம். தனக்கு பேசப்பட்ட சம்பளம் வரவேண்டும் என விடாப்படியாக இருந்த விஜயகாந்த் தயாரிப்பாளர் துரையின் சொந்த வீட்டை எழுதி வாங்கிக்கொண்டாராம். தற்போது இந்தத் தகவல் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரை வாழவைத்த விஜயகாந்த்தா ஒருவர் வாழ்ந்த வீட்டை எழுதி வாங்கியிருக்கிறார் என சமூக வலைதளங்களில் பலர் கூறிவருகின்ற்னார்.

படுத்த படுக்கையாக இருக்கும் தயாரிப்பாளர் துரை
முன்னதகா, தயாரிப்பாளர் வி.ஏ.துரை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிதாமகன், கஜேந்திரா போன்ற படங்களை எடுத்து நஷ்டமாகிவிட்டேன். இப்போது உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறேன். இயக்குநர் பாலா எனக்கு 25 லட்சம் ரூபாய் தர வேண்டும். அதையாவது அவர் திருப்பி கொடுக்க வேண்டும். மருத்துவ செலவுக்கே இப்போது என்னிடம் பணம் இல்லை என கூறியிருந்தார்.

துரைக்கு உதவிய நடிகர்கள்
இதனையடுத்து நடிகர் சூர்யா தயாரிப்பாளர் துரைக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார். அதேபோல் நடிகர் ரஜினிகாந்த்தும் துரையை தொலைப்பேசியில் அழைத்து, 'எதற்கும் கவலைப்பட வேண்டாம். நான் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறேன். ஷூட்டிங் முடிந்ததும் வந்து உதவுகிறேன்' என கூறினார். மேலும் பல நடிகர்களும் துரைக்கு உதவிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











