Maaveeran - மாவீரனின் ஒரே ஒரு காட்சிதான்.. பிரமித்துப்போன லோகேஷ் கனகராஜ்

சென்னை: Maaveeran (மாவீரன்) மாவீரன் படத்தின் ஒரே ஒரு காட்சியை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜ் பிரமித்து போன விஷயம் தெரியவந்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்கள் வரிசையில் இணைந்துவிட்டார். மேலும் சிவகார்த்திகேயனை நம்பி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் போடலாம் என்ற நம்பிக்கையும் கோலிவுட் தயாரிப்பாளர்களிடம் உருவாகியிருக்கிறது.

It has been revealed that Lokesh Kanagaraj was in awe after watching just one scene of Maaveeran

சறுக்கிய பிரின்ஸ்: ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப்போகும் விதமாக பிரின்ஸ் படத்தின் ரிசல்ட் அமைந்தது. தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை வளர்க்கும் நோக்கத்தில் அனூதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அவரது கரியரில் மோசமான தோல்வி படங்களின் வரிசையில் இணைந்தது. மேலும் ரிலீஸான ஒரே வாரத்தில் படமும் திரையரங்குகளிலிருந்தும் தூக்கப்பட்டது.

சிவகார்த்திகேயனின் மாவீரன்: இப்படிப்பட்ட சூழலில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். பிரின்ஸ் கொடுத்த மோசமான அனுபவத்தை மாவீரன் மூலம் மறக்கலாம் என்ற நம்பிக்கையில் அவரும் அவரது ரசிகர்களும் இருக்கின்றனர். படம் ஜூலை 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்திலிருந்து மொத்தம் இரண்டு சிங்கிள்கள் வெளியாகின.

ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்: இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு மாவீரன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அதில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், இயக்குநர் மடோன் அஷ்வின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் தவிர மாமன்னன் மாரி செல்வராஜ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு படத்தையும், சிவகார்த்திகேயனையும் வாழ்த்தினர்.

It has been revealed that Lokesh Kanagaraj was in awe after watching just one scene of Maaveeran

பிரமித்த லோகேஷ் கனகராஜ்: இந்நிலையில் மாவீரன் படத்தின் ஒரு காட்சியை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜ் பிரமித்துப்போன சம்பவம் தெரியவந்திருக்கிறார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பேசிய படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின், "லியோவில் லோகேஷ் கனகராஜ் பிஸியாக இருந்ததால் மாவீரன் ஸ்க்ரிப்பட்டை வாசிக்க அவருக்கு நேரமில்லை. இதனையடுத்து படத்தின் ஒரே ஒரு காட்சியை மட்டும் அவருக்கு போட்டுக்காட்டி எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.

லோகேஷின் ஐடியா: அதனைப் பார்த்த அவர் செம சூப்பராக வந்திருக்கிறது என கூறினார். இரண்டு நாட்கள் கழித்து எனக்கு ஃபோன் செய்த அவர் நீ ஒரு சீனை எனக்கு போட்டு காண்பிச்சல அதை இடைவேளையில் வைத்துவிட்டு என்றார். அதற்கு நானோ, இல்லை இது இடைவேளைக்கு பிறகு வரும் காட்சி நீ சொல்வது போன்று செய்ய முடியாது என கூறிவிட்டேன்" என்றார். அவரது இந்தப் பேட்டி எஸ்கே ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே ஒரு காட்சியை பார்த்துவிட்டு லோகேஷ் பிரமித்திருப்பதால் ஒட்டுமொத்த படமும் சிறப்பாக வந்திருக்கும் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X