twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஆச்சி' நம்மை விட்டுப் போயி அதற்குள் ஒரு வருஷமாச்சு!

    By Siva
    |

    சென்னை: மனோரமா ஆச்சியின் முதலாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    1937ம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்த மனோரமா மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். அதன் பிறகு திரையுலகிற்கு வந்த அவர் காமெடியில் கலக்கினார். காமெடி தவிர்த்து குணசித்திர வேடங்களிலும் மனோரமாவுக்கு நிகர் அவரே தான்.

    ஆச்சி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மனோரமா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    கின்னஸ் சாதனை

    கின்னஸ் சாதனை

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோரமா ஆச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். அவர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார்.

    அம்மா, பாட்டி

    அம்மா, பாட்டி

    அன்பான அம்மா, பாசமான பாட்டி கதாபாத்திரம் என்றாலே இயக்குனர்களுக்கு முதலில் நினைவுக்கு வந்தது மனோரமா தான். அவர் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.

    காமெடி

    காமெடி

    ஒரு பெண் காமெடியில் இப்படியும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் ஆச்சி. நடிப்பு மட்டும் அல்ல அழகாக பாடும் திறனும் பெற்றிருந்தவர். அவர் பாடிய டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே பாடல் காலத்தால் அழியாதது.

    மனோரமா

    மனோரமா

    படங்களில் பேசிக் கொண்டே இருந்த மனோரமா, படப்பிடிப்பு தளத்தில் சும்மா இருக்கும்போது எல்லாம் புத்தகங்கள் வாசிப்பார். மனோரமாவுக்கு புத்தகமும், கையுமாக இருப்பது மிகவும் பிடிக்கும்.

    English summary
    It has been one year, since Manorama Achi has left the world.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X