Khushbu - அலைபாயுதே லவ் ப்ரோபோஸே தோத்துடும் போலவே.. குஷ்பூவிடம் சுந்தர்.சி காதலை எப்படி சொன்னார் தெரியுமா?

சென்னை: Khushbu (குஷ்பூ) நடிகை குஷ்பூவிடம் இயக்குநர் சுந்தர்.சி எப்படி காதலை வெளிப்படுத்தினார் என்பது குறித்து தெரிய வந்திருக்கிறது.

It has come to know how director Sundar C expressed his love to actress Khushbu

தமிழில் டாப் நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. ரஜினி, கமல் என இரண்டு துருவங்களுடனும், பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தவர். குஷ்பூவின் மேல் அபரிமிதமான பாசத்தால் அவருக்கு தமிழ்நாட்டில் கோயில் கட்டிய காட்சிகள் எல்லாம் அரங்கேறின. மேலும் குஷ்பூ இட்லி என்பதும் தமிழ்நாட்டில் ஃபேமஸ் ஆனது. அந்த அளவுக்கு குஷ்பூ 80ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.

மும்பை பூர்வீகம் ஆனாலும்: மும்பையை பூர்வீகமாக கொண்டவர் குஷ்பூ. ஆனால் தமிழை முறைப்படி விரைவிலேயே கற்றுக்கொண்ட அவர் தான் அறிமுகமான சில படங்களிலேயே சொந்த குரலில் டப்பிங் பேசினார். அழகு, நடிப்பு, நடனம் என அத்தனையும் வாய்க்கப்பெற்ற அவர் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

அரசியலில் குஷ்பூ: பெரிய திரையில் கலக்கிவந்த குஷ்பூ சின்னத்திரையில் சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியிருக்கிறார். தனது அரசியல் வாழ்க்கையை திமுகவில் ஆரம்பித்த அவர் அதன் பிறகு காங்கிரஸ் சென்றார். அங்கும் சில பிரச்னைகள் வெடிக்க இப்போது பாஜகவில் ஐக்கியமாகி தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்துவருகிறார்.

மீண்டும் நடிப்பில் குஷ்பூ: சில காலம் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்திருந்த அவர் இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவர் தற்போது ராமபானம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதில் கோபிசந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் விஜய்யுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார் குஷ்பூ. ஆனால் அவர் நடித்த காட்சிகள் சில காரணங்களால் படத்திலிருந்து தூக்கப்பட்டன.

It has come to know how director Sundar C expressed his love to actress Khushbu

சுந்தர்.சி: இதற்கிடையே அவர் தனது கரியர் உச்சத்தில் இருந்தபோதே இயக்குநர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் குஷ்பூவிடம் சுந்தர்.சி எப்படி காதலை வெளிப்படுத்தினார் என்பது குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது, ஒருமுறை குஷ்பூவிடம் சென்ற சுந்தர்.சி நான் உன்னை காதலிக்கிறேன் என்றெல்லாம் சொல்லவில்லையாம்.

நமக்கு குழந்தைகள் பிறந்தால் உன்னை போல இருக்குமா இல்லை என்னை போல இருக்குமா என கேட்டிருக்கிறார். இதனை கேட்ட பிறகு குஷ்பூவும் செம ஷாக்காகியிருக்கிறார். மேலும் சுந்தர்.சி குஷ்பூவிடம், எனக்கு சுத்தி வளைத்தெல்லாம் பேச தெரியவில்லை. உன்னை கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். நீ என்ன சொல்ற என கேட்டிருக்கிறார். இவ்வளவு தைரியமாக வந்து காதலை சொல்லியவுடன் குஷ்பூவும் சுந்தர்.சியின் ப்ரோபோஸலுக்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X