Atlee Priya - ப்ரதர்.. ரியல் வாழ்க்கையில் நடந்ததுதான் ராஜா ராணியா?.. அட்லீ - ப்ரியா காதல் கதை இதுதான்?
சென்னை: Atlee Priya (அட்லீ ப்ரியா) அட்லீயும், ப்ரியாவும் எப்படி காதலில் விழுந்தார்கள் என்பது குறித்து தெரிய வந்திருக்கிறது.
இயக்குநர் அட்லீ தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். நான்கு படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் அட்லீ குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநர் என்ற பெயரை பெற்றுவிட்டார். ஏனெனில் அவர் இயக்கிய 4 படங்களில் பிகில் படம் மட்டும்தான் தோல்வியை சந்தித்தது. மற்ற படங்கள் நல்ல வரவேற்பையே பெற்றன.

ஜவான்: தமிழில் வலம் வந்த அட்லீ அடுத்ததாக ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார். ஹிந்தியில் என்ட்ரி கொடுத்திருக்கும் முதல் படத்திலேயே ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருக்கிறார். படம் கடந்த 7ஆம் தேதி வெளியானது. முதல் நாள் முதல் காட்சியில் பாசிட்டிவ் விமர்சனங்களே வந்தன. எனவே தமிழை போல் ஹிந்தியிலும் அவர் தடம் பதித்துவிட்டார். இன்னும் சில வருடங்களுக்கு பாலிவுட்டில் அட்லீ பிஸியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
விமர்சனம்: அட்லீயின் இயக்கத்திற்கென்று ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேசமயம் அவர் மற்ற படங்களை காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனமும் எழுவது உண்டு. அதாவது ராஜா ராணி படம் மௌனராகம் என்றும், தெறி சத்ரியன் என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் அட்லீ அதற்கெல்லாம் கவலைப்படவில்லை. 7 ஸ்வரங்களுக்குள்தான் ட்யூன் போட முடியும் என இந்த விவகாரத்துக்கு ஒரே ஒருமுறை விளக்கம் அளித்திருந்தார்.
திறமைதான்: இப்படி பல விமர்சனங்களை அட்லீ சந்தித்தாலும் அவரது மேக்கிங்கில் எந்த குறையும் வைக்கமாட்டார் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து. அதேபோல் அட்லீ அதிகம் உருவ கேலியையும் சந்தித்திருக்கிறார். குறிப்பாக ப்ரியாவை அவர் காதலித்து திருமணம் செய்தபோது அட்லீயின் நிறத்தையும் ப்ரியாவின் நிறத்தையும் ஒப்பிட்டு எல்லை மீறி கிண்டலடித்தனர் சிலர். அதுகுறித்து பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அட்லீ வெள்ளை, கறுப்பு என்பதெல்லாம் வெறும் கலர்தான் அறிவு இல்லை என பதிலடி கொடுத்திருந்தார்.
காதல் கதை: அட்லீக்கும் ப்ரியாவுக்கும் அண்மையில்தான் ஒரு மகன் பிறந்தார். அவருக்கு மீர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அட்லீக்கும் ப்ரியாவுக்கும் காதல் உருவான கதை குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது அட்லீ ஷங்கரிடம் உதவி இயக்குநராக சேர்வதற்கு முன்பு முகப்புத்தகம் என்ற குறும்படத்தை எடுத்தார். அதில் ப்ரியாதான் நடித்திருப்பார்.
அப்போது இருவருக்கும் பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. அந்த சமயத்தில் ப்ரியா அட்லீயை ப்ரதர் ப்ரதர் என்றுதான் அழைப்பாராம். அப்போது ஆரம்பித்த பழக்கம் நீண்ட நாட்கள் சென்றிருக்கிறது. அந்த சமயத்தில் ப்ரியாவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள். இதை ப்ரியா அட்லீயிடம் எதார்த்தமாக சொல்ல நான் என்னுடைய ஜாதகத்தையும் தரவா என அட்லீ கேட்டாராம். அப்போதுதான் அட்லீக்கு தன் மீது காதல் இருப்பது ப்ரியாவுக்கு தெரியவே வந்திருக்கிறது. அதையடுத்து இருவரும் மீண்டும் பழக ப்ரியாவுக்கும் அட்லீ மீது காதல் வந்துவிட்டதாம்.
ராஜா ராணி படத்தில் நஸ்ரியா முதலில் ஆர்யாவை ப்ரதர் என்றுதான் அழைப்பார். தற்போது இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் தனது வாழ்க்கையில் நடந்ததைத்தான் படத்தில் அட்லீ வைத்துவிட்டார் போல என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











