Fahad Faasil - கட்டிப்பிடிக்கும்போது பட்ட நடிகையின் லிப்ஸ்டிக்.. செம டென்ஷனான ஃபகத் பாசில்
சென்னை: Fahad Faasil (ஃபகத் பாசில்) மாமன்னன் படத்தில் நடித்தபோது ஃபகத் பாசில் கோபப்பட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
பிரபல இயக்குநர் ஃபாசிலின் மகன் ஃபகத் பாசில். மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் அவர் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை எடுத்திருக்கிறார். அலட்டல் இல்லாமல் தனது கண்களை வைத்துக்கொண்டே உடன் நடிப்பவர்களை தாண்டி ஸ்கோர் செய்துவிடும் வல்லமை ஃபகத்துக்கு இருக்கிறது. இதன் காரணமாக பல மொழிகளிலும் அவரால் தடம் பதிக்க முடிகிறது. அவருக்கென்று பெண் ரசிகைகள் ஏராளமானோர் இருக்கின்றனர்.
புஷ்பா: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் பன்வர் சிங் செகாவாட் என்ற கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடித்திருந்தார். முதல் பாகத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக அவரது லுக் வித்தியாசமாக இருந்ததாகவும் ரசிகர்கள் கூறினர். படத்தின் இரண்டாவது பாகத்திலும் கமிட்டாகியிருக்கும் ஃபகத் சமீபத்தில்தான் தனது போர்ஷன் ஷூட்டிங்கை முடித்தார்.

விக்ரம்: அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் அமர்நாத் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்தப் படத்தில் தன்னுடைய அசால்ட்டான நடிப்பால் அப்ளாஸை அள்ளினார். குறிப்பாக இடைவேளை காட்சியில் கமலிடம் பேசும்போதும், தனது மனைவியை கொன்றவரிடம் என் கண்ணை பாரு என சொல்லும் இடத்திலும் தான் எவ்வளவு பெரிய நடிகன் என்பதை உணர்த்தியிருந்தார்.
மாமன்னன் கரியர் பெஸ்ட்: அவரது கரியர் பெஸ்ட்டாக மாமன்னன் படம் அமைந்திருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான படத்தில் ரத்னவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாதி திமிர் உள்ளவராக எந்த அலப்பறை போட்டு கத்தி எதுவும் பேசாமல் சின்ன சின்ன கண் அசைவுகளாலும் தனது அசுரத்தனமாக நடிப்பாலும் மிரட்டியிருந்தார். இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் வடிவேலு எப்படி படத்துக்கு ஒரு தூணாக இருந்தாரோ அதேபோல் ஃபகத்தும் ஒரு தூணாக இருந்தார் என கூறினர்.
ரவீனா பேட்டி: இந்நிலையில் மாமன்னன் படத்தில் ஃபகத்ட் பாசிலுக்கு ஜோடியாக அடித்த ரவீனா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "படத்தில் கட்டிப்பிடிக்கும் காட்சி ஒன்று வரும். அப்போது எனது லிப்ஸ்டிக் அவரது சட்டையில் பட்டுவிட்டது. அந்த சமயத்தில் நான் அவருக்கு முத்தம் கொடுத்துவிட்டதாக படப்பிடிப்பில் அனைவரும் கிண்டலடித்தார்கள். ஆனால் ஒன்று அவருக்கு திருமணம் ஆகியிருக்காவிட்டால் முத்தம் கொடுத்திருப்பேன்.
கோபப்பட்ட ஃபகத்: அவருக்கு மேக்கப் போடுவது பிடிக்காது. ஏற்கனவே என்னிடம் நீ மேக்கப் போடுவியா என கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன். இப்படிப்பட்ட சமயத்தில் எனது லிப்ஸ்டிக் அவரது சட்டையில் பட்டதும் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார். இதற்கிடையே என்னிடம் அவர் மேக்கப் போட மாட்டேனு சொன்ன லிப்ஸ்டிக் மட்டும் போட்டிருக்க என கேட்டார். அதற்கு நானோ எனது உதடு கலரே அதுதான் என சொல்லியிருந்தேன். ஆனால் எனது லிப்ஸ்டிக் பட்டதும் கொஞ்சம் கோபத்துடன் அப்போ என்னிடம் நீ பொய் சொல்லிருக்க என கேட்டார்" என்று ரவீனா அந்தப் பேட்டியில் பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications











