Rajinikanth - நடிகையின் வீட்டுக்கு நைட்டில் சென்று ரஜினி செய்த காரியம்.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) நடிகையின் வீட்டுக்கு ரஜினிகாந்த் இரவில் சென்று செய்த காரியம் குறித்து தெரியவந்திருக்கிறது.

நடத்துநராக பணிபுரிந்து பிறகு சினிமா கல்லூரியில் சேர்ந்து நடிப்பை கற்றுக்கொண்டவர் ரஜினிகாந்த். நடத்துநராக இருந்தபோதே அவர் மேடை நாடகங்களில் ரஜினியின் நடிப்பு அப்ளாஸை அள்ளியது. அந்த நம்பிக்கையில் சென்னை வந்தவர் கே.பாலசந்தர் கண்களில் பட்டு சினிமாவுக்குள் நுழைந்தவர்.

It has come to light that Rajinikanth went to the actress house at night and did what he did

அவமானங்கள்: அவர் சினிமாவில் அறிமுகமானபோது ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்தார். ஒழுங்காக தமிழ் பேச வரவில்லை, ஹீரோவுக்கான எந்த லட்சணமும் இல்லை என உருவ கேலியும் செய்யப்பட்டார். ஆனால் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கிக்கொண்டு திறமையை வளர்த்துக்கொண்டு சூப்பர் ஸ்டார் நாற்காலியை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார்.

இன்ஸ்பிரேஷன்: ரஜினிகாந்த்தின் தாக்கம் எப்படி இருக்கிறது என்றால் தற்போது சினிமாவில் நடித்துக்கொண்டிருப்பவர்கள் அனைவருமே ரஜினியின் ரசிகர்கள்தான். முக்கியமாக அவரது சாயலை பின்பற்றி நடிக்க வேண்டும் என்று அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள் ஒரு எண்ணம் எழுந்துவிட்டது. இதன் காரணமாக இந்திய சினிமாவில் தவிர்க்கவே முடியாத ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார் ரஜினி.

ஜெயிலர்: இதுவரை 169 படங்களில் நடித்திருக்கும் ரஜினிக்கு கடந்த சில வருடங்களாக சொல்லிக்கொள்ளும்படி ஹிட் ஏதும் அமையவில்லை. அந்த ஏக்கத்தை சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் தீர்த்து வைத்திருக்கிறது. படம் இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு அவர் நடிப்பில் லால் சலாம் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து ஞானவேலு இயக்கத்தில் ஒரு படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

நடிகை பேட்டி: இந்நிலையில் ரஜினிகாந்த் தன்னுடைய ஆரம்ப காலத்தில் நடிகையின் வீட்டுக்கு இரவில் சென்ற சம்பவம் தெரியவந்திருக்கிறது. நடிகை ஹீமா சௌத்ரி சமீபத்தில் அளித்த பேட்டியில், "சினிமா கல்லூரியில் நானும், ரஜினியும் ஒன்றாக படித்தோம். பிறகு நண்பர்கள் ஆனோம். அவருக்கு முன்னதாகவே எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது. ரஜினிக்கு லேட்டாகத்தான் வாய்ப்பு கிடைத்தது.

இரவில் வந்த ரஜினி: வாய்ப்ப்கள் ஏதும் கிடைக்காத சமயத்தில் ரஜினிகாந்த் பெரும்பாலும் தனிமையில்தான் இருப்பார். ஒருவழியாக அவருக்கு கே.பாலசந்தரின் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது. இதை உடனடியாக என்னிடமும் என் தாயிடமும் சொல்லிவிட வேண்டும் என்பதற்காக நள்ளிரவில் என் வீட்டுக்கு வந்துவிட்டார். வந்தவர் நேராக எனது அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கினார்" என்றார்.

மேலும் பேசிய அவர் இப்போது ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அப்போது எப்படி எளிமையாக இருந்தாரோ அதேபோல்தான் இப்போதும் இருக்கிறார் எனவும் கூறினார். முன்னதாக நடிகை ஹீமா சௌத்ரி கே.பாலசந்தர் இயக்கிய மன்மத லீலை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் 1970,1980களில் அவர் முன்னணி நடிகையாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X