100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து
சென்னை: விஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ரிலீஸாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்டது.
அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாகின. வசூல் நிலவரம் தொடர்பாக இன்று வரை சமூக வலைதளங்களில் பெரிய பஞ்சாயத்து போய்க் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த 2 படங்களும் ரிலீஸாகி 100 நாட்கள் ஆகிவிட்டது.
சிவா
விஸ்வாசம் என்னும் சூப்பர் ஹிட் படம் கொடுத்த கடவுள், அஜித், தல ரசிகர்கள், நயன்தாரா, ஜெகபதி பாபு, படக்குழு, மீடியா, சினிமா ரசிகர்கள், சத்யஜோதி பிலிம்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சிவா.
சத்யஜோதி
குடும்பங்கள் கொண்டாடி வெற்றியடையச் செய்த படம் விஸ்வாசம். இந்நிலையில் ரசிகர்கள், குடும்ப ஆடியன்ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளது சத்யஜோதி பிலிம்ஸ்.
கார்த்திக் சுப்புராஜ்
பேட்ட படத்தை வெற்றி அடைய செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
சிறப்பு
கார்த்திக் சுப்புராஜின் ட்வீட்டை பார்த்து ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications