கொரோனா காலகட்டத்தில்.. ஷூட்டிங்கை தொடங்குவது பயமாகத்தான் இருக்கிறது.. நடிகை ஸ்ருதி ஹாசன்!
சென்னை: கொரோனா காலகட்டத்தில் ஷூட்டிங்கை தொடங்குவது பயத்தை ஏற்படுத்துகிறது என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஸ்ருதிஹாசன் தமிழில் ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் நடித்து வருகிறார்.
இதில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கிறார். தெலுங்கில், ரவிதேஜாவுடன் கிராக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மன ஆரோக்கியம்
கொரோனா லாக்டவுன் காரணமாக, மும்பையில் உள்ள தனது வீட்டில் வசித்துவந்த நடிகை ஸ்ருதிஹாசன், இப்போது ஐதராபாத்தில் இருக்கிறார். அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன், லாக்டவுன் காரணமாக, மக்களின் மன ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கிறது, அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

3 வருட சிகிச்சை
'இப்போது இதுதான் மக்களின் உண்மையான பிரச்னை என்று கருதுகிறேன். ஆனால், மக்கள் பொதுவாக எச்சரிக்கையாக இருப்பார்கள் அல்லது இந்த விஷயம் பற்றிப் பேச வெட்கப் படுகிறார்கள். நான் மூன்று வருடங்களாக இதற்கானச் சிகிச்சையில் இருக்கிறேன். மக்களுக்கும் அதை தீவிரமாகப் பரிந்துரைக்கிறேன் என்று கூறியிருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.

சவாலான ஒன்று
இந்நிலையில், கொரோனா காலகட்டத்தில் ஷூட்டிங்கை தொடங்குவது பயத்தை ஏற்படுத்துகிறது என்று ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: அரசு அறிவுறுத்தல்படி, குறைவான நபர்களுடன் படப்பிடிப்புகளை நடத்துவது சவாலான ஒன்றுதான். ஆனால் அது வேலையை நெறிப்படுத்தும் என்றும் பங்கேற்பவர்கள் அதிகமாக கவனம் செலுத்துவார்கள் என்றும் நம்புகிறேன்.

பாசிட்டிவான விஷயங்கள்
இந்த நேரத்தில் வேறு வழியில்லை என்பதால் அதில் இருக்கும் பாசிட்டிவான விஷயங்களை மட்டுமே பார்க்கிறேன். ஒடிடியில் படங்கள் திரையிடப்படுவது பற்றி கேட்கிறார்கள். இந்த பிரச்னைகள் முடிந்து பாதுகாப்பான சூழல் வரும்போது மக்கள் கண்டிப்பாகத் தியேட்டருக்கு வந்து படங்கள் பார்ப்பார்கள். ஏனென்றால் அது சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் விஷயம். இப்போது மக்கள் வீட்டில் இருப்பதால் சினிமாவை ரசிக்க, ஒடிடி தளங்களை பயன்படுத்து கிறார்கள்.

வாழ்வாதாரங்கள்
ஆனால், இரண்டும் வெவ்வேறு அனுபவங்களைக் கொடுக்கக் கூடியவை. இந்த கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்புகளை தொடங்குவது பயமாகத்தான் இருக்கிறது. ஆனால், பலரது வாழ்வாதாரங்கள் இந்த இன்டஸ்ட்ரியை நம்பிதான் இருக்கிறது. அதனால், கவனமாகவும் பொறுப்புடனும் வேலைக்குத் திரும்ப வேண்டும். அது ஒவ்வொருவருக்கும் முக்கியம் என்று நினைக்கிறேன். இவ்வாறு நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











