ஆதித்ய வர்மா ரெடி, நீங்க ரெடியா?: சென்டிமென்ட் வீடியோ வெளியிட்ட த்ருவ்

By Siva

Recommended Video

Adithya Varma Making Video | Dhruv Vikram | Gireesaaya

சென்னை:ஆதித்ய வர்மா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார் த்ருவ் விக்ரம்.

அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகிறார் விக்ரமின் மகன் த்ருவ். ஆதித்ய வர்மா படத்தை கிரிசாயா இயக்கியுள்ளார். அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் வாங்கா ரெட்டியின் உதவியாளர் தான் இந்த கிரிசாயா.

It is a wrap: Says Adithya Dhruv Varma

கிரிசாயா படப்பிடிப்பை பரபரவென்று நடத்தி முடித்துவிட்டார். இந்நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார் த்ருவ்.

அந்த வீடியோவில் த்ருவ் ஹீரோயின் பனிடா சந்துவுக்கு நெற்றியில் முத்தம் கொடுக்கிறார். அந்த காட்சியுடன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஆதித்ய வர்மா படப்பிடிப்பின்போது விக்ரம் தனது மகனுடன் இருந்து அவருக்கு ஃபுல் சப்போர்ட் கொடுத்துள்ளார்.

முன்னதாக கடந்த மாதம் வெளியான டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அர்ஜுன் ரெட்டி படத்தை விஜய் தேவரகொண்டாவுக்காக நம் தமிழ் ரசிகர்கள், ரசிகைகள் ஏற்கனவே பலமுறை பார்த்துவிட்டார்கள். இருப்பினும் அந்த கதையில் நம்ம சீயான் மகன் எப்படி நடித்திருக்கிறார் என்பதை பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த மாதம் 21ம் தேதி வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் இதுவரை ரூ. 261 கோடி வசூல் செய்துள்ளது. வசூலில் கபிர் சிங் அர்ஜுன் ரெட்டியை ஓரங்கட்டிவிட்டார். அந்த கபிர் சிங் படத்தை விஜய் தேவரகொண்டா இன்னும் பார்க்கவில்லை. ஏன் பார்க்கவில்லை என்று கேட்டதற்கு, தெரிந்த கதை தானே எதற்காக பார்க்கணும் என்று பதிலுக்கு கேள்வி எழுப்பினார் விஜய் தேவரகொண்டா.

கபிர் சிங் போன்று இல்லாமல் ஆதித்ய வர்மாவுக்கு அர்ஜுன் ரெட்டியின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புவோமாக. ஆதித்ய வர்மா படத்தை பார்ப்பவர்கள் அவரை அர்ஜுன் ரெட்டி மற்றும் கபிர் சிங்குடன் நிச்சயம் ஒப்பிடுவார்கள். இது தவிர்க்க முடியாதது என்பது விக்ரமிற்கும் தெரியும். இருப்பினும் அவருக்கு தன் மகன் மீது அதிக நம்பிக்கை உள்ளது.

ஆதித்ய வர்மா முன்னதாக வர்மா என்ற பெயரில் எடுக்கப்பட்டு அது தயாரிப்பாளருக்கு பிடிக்காமல் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X