த்ரிஷாவை ஓரங்கட்டிவிட்டு சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த அமலா பால்
சென்னை: துருவ நட்சத்திரம் படத்தில் த்ரிஷாவை அமலா பால் ஓரங்கட்டியுள்ளார்.
கௌதம் மேனன் சூர்யாவை வைத்து இயக்கும் படம் துருவ நட்சத்திரம். இதில் அவருக்கு நாயகியாக நடிக்க த்ரிஷாவும், அமலா பாலும் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகின.
கௌதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்ததால் த்ரிஷாவுக்கு அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. அதனால் துருவ நட்சத்திர வாய்ப்பு அவருக்கு கிடைக்கிற மாதிரி இருந்தது.

அமலா பாலின் முயற்சி
விஜய்யுடன் நடித்துவிட்டதால் அடுத்ததாக அஜீத் மற்றும் சூர்யாவுடன் நடிக்க விரும்புகிறார் அமலா பால். அதனால் அஜீத், சூர்யாவை வைத்து படம் எடுக்கும் நிறுவனங்களின் படியை ஏறி இறங்கி வருகிறார்.

துருவ நட்சத்திரம்
துருவ நட்சத்திரத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தாக வேண்டும் என்று அமலா பால் நினைத்தாராம்.

வாய்ப்பு கிடைத்துவிட்டதே
துருவ நட்சத்திரத்தில் த்ரிஷாவை விட்டுவிட்டு அமலா பாலை தேர்வு செய்துள்ளார்களாம். த்ரிஷாவுக்கு மார்க்கெட் இல்லாததும், அமலாவுக்கு தமிழ், தெலுங்கிலும் மார்க்கெட் இருப்பதும் தான் இந்த முடிவுக்கு காரணமாம்.


Click it and Unblock the Notifications











