நேற்றே அவ்வை சண்முகியாக மாறிவிட்டாராம் ஆண்டவர்
Recommended Video

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குகிறார் என்பது உறுதியாகிவிட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கினார். அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்துவிட்டதால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி எழுந்தது.
தனது அரசியல் கருத்துகளை மக்களிடம் எளிதில் எடுத்துச் செல்ல பிக் பாஸ் உதவும் என்பதால் அவர் நிச்சயம் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிக் பாஸ் 2
அரசியலில் பரபரப்பாக இருந்தாலும் அதற்கிடையே பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என்று முடிவு செய்துவிட்டார் கமல். இதையடுத்து பிக் பாஸ் ப்ரொமோ வீடியோ ஷூட்டில் கலந்து கொண்டுள்ளார்.

வீடியோ
பிக் பாஸ் 2 ப்ரொமோ வீடியோ ஷூட் சென்னையில் உள்ள ஃபிலிம் ஸ்டுடியோ ஒன்றில் நேற்று நடந்துள்ளது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஜூன் முதலாவது அல்லது இரண்டாவது வாரம் முதல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

போட்டியாளர்கள்
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்களின் பட்டியலை ரகசியமாக வைத்துள்ளனர். இந்த முறை யார், யார் எல்லாம் வந்து என்னென்னவெல்லாம் பேசப் போகிறார்களோ?

அரசியல்
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் கமல் ஹாஸன் என்னென்ன அரசியல் கருத்துகளை கூறப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அரசியல் கருத்துகளை மக்களிடம் எளிதாக, அழகாக கொண்டு சென்றார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











