மூக்குத்தி அம்மன் 2.. மீண்டும் அம்மனாக மாறும் நயன்தாரா!
சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது.ஆனால், அதில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மூக்குத்தி அம்மன் 2வில் நயன்தாரா நடிப்பது உறுதியாகி உள்ளது.
ரேடியோவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழக்கி பிரபலமான ஆர்ஜே பாலாஜிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். ரேடியோவில் பிரபலமானதைத் தொடர்ந்து சினிமாவிலும் காமெடியனாக களமிறங்கினார். நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதியுடன் இவர் செய்த அலப்பாறையை பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது.

ஆர்ஜே பாலாஜி: ஒரு கட்டத்தில் காமெடி வேடங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஹீரோவாக மாறினார் ஆர்ஜே.பாலாஜி. அந்த வகையில் அவர் ஹீரோவாக நடித்த எல்.கே.ஜி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதால், அதைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி இணை இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார் ஆர்.ஜே.பாலாஜி அந்தப்படங்களும் வெற்றி பெற்றன.
மூக்குத்தி அம்மன்: இவர் என்ஜே சரவணனுடன் இணைந்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கினார். 2020ம் ஆண்டு இத்திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இப்படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியான போதும் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் அம்மனாக நயன்தாரா அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். உடனே ஆர்ஜே பாலாஜியின் காமெடி என படத்தை அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.
மீண்டும் நயன்தாரா: இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஆர்ஜே பாலாஜி கூறிய நிலையில், முக்கியமாக மூக்குத்தி அம்மன் 2 ஆம் பாகத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாகவும் அவருக்கு பதிலாக த்ரிஷா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், தற்போது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டாம் பாகத்தில் மீண்டும் அம்மனாக நயன்தாரா நடிப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications