இப்படியும் கொலு வைக்கலாம்: நவராத்திரியை வித்தியாசமாக கொண்டாடும் தேவி சினிபிளக்ஸ்
சென்னை: சென்னையில் உள்ள தேவி சினிபிளக்ஸில் நவராத்திரியை வித்தியாசமாக கொண்டாடுகிறார்கள்.
இந்தியா முழுவதும் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு கோவில்கள், வீடுகளில் கொலு வைத்து கொண்டாடுகிறார்கள்.

படிக்கட்டுகள் வைத்து அதில் கடவுள்களின் பொம்மைகளை வைத்து வழிபடுபவது வழக்கம். சில வீடுகளில் தலைவர்களின் பொம்மைகளையும் வைத்து அழகு பார்க்கிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் உள்ள தேவி சினிபிளக்ஸில் நவராத்திரியை முன்னிட்டு வித்தியாசமான கொலு வைத்துள்ளனர். படிக்கட்டுகள் வைத்து அதில் பொம்மைகளுக்கு பதில் திரையுலக பிரபலங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர்-நடிகைகள் கடவுள் வேஷம் போட்டு நடித்தபோது எடுத்த புகைப்படங்களும் கொலுவில் வைக்கப்பட்டுள்ளது.
தியேட்டருக்கு வருவாய் தரும் நடிகர்-நடிகைகளுக்கு கொலு வைத்து தேவி சினிபிளக்ஸ் கவுரவப்படுத்தியுள்ளது. இந்த வித்தியாசமான கொலு ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











