எல்லாரையும் திருப்தி பண்ண முடியாது... குறை சொல்பவர்களுக்கு பாண்டிராஜ் பதில்!

சென்னை: கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் உறவுகளின் பாசத்தையும் தன்னுடைய படங்களின் மூலம் பதிவு செய்து வருபவர் இயக்குனர் பாண்டிராஜ்

கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை வெற்றியைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது

என்னதான் ஹிட் படமே கொடுத்தாலும் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்த முடியாது என பாண்டியராஜ் ஓபனாக பேசியுள்ளார்.

கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தை

கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தை

பசங்க என்ற அட்டகாசமான ஹிட் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பாண்டிராஜ் அடுத்தடுத்த இயக்கிய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தைப் பெற்றன. குறிப்பாக இவரது படங்களில் கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் உறவுகளின் பாசத்தையும் அழுத்தமாக ஒவ்வொரு படங்களிலும் கூறி வருகிறார்.

சென்டிமென்ட் பார்முலாவில்

சென்டிமென்ட் பார்முலாவில்

அந்த வகையில் கார்த்தியின் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் பாண்டிராஜ் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கடைக்குட்டி சிங்கம் பல பாராட்டுகளைப் பெற்றது. இந்த நிலையில் அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை அதே சென்டிமென்ட் பார்முலாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வெற்றி பெற்றது

பாலியல் வன்கொடுமைகள்

பாலியல் வன்கொடுமைகள்

குடும்பப் பின்னணியில் சமூக பிரச்சனையையும் கூற நினைத்த இயக்குனர் பாண்டிராஜ் எதற்கும் துணிந்தவன் படத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து ஆணித்தரமாக பேசி இருந்தார். மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடத்திருக்க பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் உருவான எதற்கும் துணிந்தவன் சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியானது. சூர்யா தனது ஒவ்வொரு படங்களிலும் சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்துக்களை கையில் எடுத்து பேசி வருகிறார். எதற்கும் துணிந்தவன் படத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசியுள்ளார்.

நெகட்டிவ் விமர்சனம்

நெகட்டிவ் விமர்சனம்

எதற்கும் துணிந்தவன் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்து இருந்தாலும் சிலர் இப்படத்தைப் பற்றி நெகட்டிவ்வாக விமர்சனம் செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் நெகட்டிவ் விமர்சனம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் பேசுகையில் எதற்கும் துணிந்தவன் படம் தன்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான படம் நடிகர் சூர்யா இதுபோன்ற ஒரு கதையில் துணிந்து நடித்ததற்கு அனைவரும் பெருமைப்பட வேண்டும்.

எல்லாரையும் திருப்தி பண்ண முடியாது

எல்லாரையும் திருப்தி பண்ண முடியாது

மிகப்பெரிய நடிகர் இதுபோன்ற சமூகத்துக்கு தேவையான நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கும்போது சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். அதே சமயம் எல்லா படமும் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்துவது இல்லை. எல்லாரையும் திருப்திப்படுத்தவும் முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான படங்களை ரசிப்பார்கள். என் படங்கள் கட்டாயமாக குடும்ப ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும் இவ்வாறு நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதில் அளித்து பாண்டிராஜ் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X