கண்ணா, விஜய் பிறந்தநாள் அன்று 2 லட்டு தின்ன ஆசையா?
சென்னை: விஜய் பிறந்தநாள் அன்று அவரின் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது.
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். படத்தில் நயன்தாரா, சிந்துஜா, கதிர், ஜாக்கி ஷ்ராஃப், யோகி பாபு, விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடப்பதால் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை அட்லி.

பிறந்தநாள்
விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட அவரின் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் அவரின் பிறந்தநாளையொட்டி வரும் 21ம் தேதி இரவு தளபதி 63 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அந்த தலைப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் யூகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அனிருத்
அட்லி படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் மாநகரம் படம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்தை விஜய்யின் உறவினரான ஜேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். தளபதி 64 படத்திற்காக விஜய் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம்.

டபுள் ட்ரீட்
விஜய்யின் பிறந்தநாள் அன்று தளபதி 64 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட உள்ளார்களாம். அப்படி என்றால் விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. விஜய் பிறந்தநாள் அன்று தளபதி 63 படத்தின் தலைப்பு மற்றும் தளபதி 64 ஆகியவற்றை ட்விட்டரில் டிரெண்டாக்கவிடுவார்கள் ரசிகர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

ரகுல் ப்ரீத் சிங்
தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவருக்கு மிகவும் ராசியான ஹீரோயின் த்ரிஷா நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. கில்லி, திருப்பாச்சி போன்று இந்த படத்திலும் மாஸ் ஜோடி என்று பேசப்பட்டது. இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங்கை ஹீரோயினாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். அப்படி ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் ஆனால் அவர் விஜய்யுடன் ஜோடி சேரும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி 64 படத்தின் ஷூட்டிங்கை செப்டம்பர் மாதம் துவங்குகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











