Leo :விக்ரம் படத்தை பாலோ செய்யும் லியோ.. விஜய் பிறந்தநாளில் சிறப்பான சம்பவம் லோடிங்!
சென்னை : நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க உருவாகி வருகிறது லியோ படம். படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் லியோ படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. விக்ரம் படத்தின் இன்டஸ்ட்ரியல் ஹிட்டையடுத்து லியோ படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. படம் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

விஜய் பிறந்தநாளில் வெளியாகும் லியோ படத்தின் கிளிம்ப்ஸ் : நடிகர்கள் விஜய், த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இந்தப் படம் உருவாகிவருகிறது. படம் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் நடிகர் விஜய் -த்ரிஷா இணைந்துள்ள நிலையில், அவர்களது வழக்கமான கெமிஸ்ட்ரி இந்தப் படத்திலும் வொர்க் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த படங்களை ரசிகர்களின் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை கவரும்வகையில் கொடுத்து முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் என்ற இன்டஸ்ட்ரியல் ஹிட் படத்தை அவர் கொடுத்துள்ள நிலையில், லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக உயர்ந்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த வீடியோக்கள், போஸ்டர்களும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன.
நடிகர் விஜய்யின் கடந்த படம் வாரிசு வசூலில் சிறப்பாக அமைந்தாலும், கலவையான விமர்சனங்களையே பெற்றது. குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான விஜய்யை கொடுத்தது. இந்நிலையில், இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கேங்ஸ்டர் படமான லியோவை வெற்றிப் படமாக்க வேண்டிய கட்டாயம் படக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது படத்தின் பிரம்மாண்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வரும் சூழலில், தொடர்ந்து படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு நடைபெறவுள்ளது. அந்தவகையில் இந்தப் படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தோடு நிறைவுபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளையும் இன்னும் 3 மாதங்களில் நிறைவு செய்து அறிவித்தபடி அக்டோபர் 19ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் விக்ரம் படத்தின் கிளிம்ப்ஸ் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டது போலவே, இந்த மாதம் விஜய்யின் பிறந்தநாளிலும் லியோ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜய் பிறந்தநாளையொட்டி லியோ படத்தின் கிளிம்ப்ஸ்சுடன் தளபதி 68 படத்தின் டைட்டில் வீடியோ, அறிவிப்பு வீடியோ, போஸ்டர்கள், பர்ஸ்ட் லுக் போன்றவற்றையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











