அப்பாவான சென்றாயன்: பிக் பாஸ் வீட்டுக்கு வந்த மனைவி கண்ணீர்

By Siva

Recommended Video

சென்றாயனுக்கு குட் நியூஸ் சொன்ன மனைவி கயல்விழி- வீடியோ

சென்னை: சென்றாயன் மனைவி பிக் பாஸ் வீட்டிற்கு வந்து தனது கணவரிடம் நல்ல செய்தி கூறியுள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் இருப்பவர்களில் அப்பாவி என்று பெயர் எடுத்தவர் சென்றாயன். ஆனால் அவர் அப்பாவி இல்லை தனது உண்மையான குணத்தை மறைத்துக் கொண்டு நடிப்பதாக சக போட்டியாளர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் அழுகாச்சி வாரத்தின் ஒரு பகுதியாக சென்றாயனின் மனைவி கயல்விழி பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார்.

குடும்பத்தார்

குடும்பத்தார்

அது என்ன அழுகாச்சி வாரம் என்றால் போட்டியாளர்களின் குடும்பாத்தாரை வீட்டிற்கு வரவழைத்து அனைவரையும் அழ வைக்கும் வேலையை செய்கிறார் பிக் பாஸ். இந்த வாரம் முழுக்க குடும்பத்தார் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார்கள். போட்டியாளர்கள் அவர்களை பார்த்து அழ, பதிலுக்கு அவர்களும் அழ இப்படி அழுகாச்சியாக போய்க் கொண்டிருக்கிறது பிக் பாஸ்.

குழந்தை

குழந்தை

34 வயதாகும் சென்றாயனுக்கு தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற வருத்தம் அதிகமாகவே உள்ளது. ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வந்த சிறுவர், சிறுமியரை பார்த்த சென்றாயனுக்கு மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த குட்டீஸில் ஒன்றை தத்தெடுக்கப் போவதாக சென்றாயன் கமல் ஹாஸனிடம் தெரிவித்தார்.

கமல்

கமல்

சென்றாயன் ஆதரவற்ற குழந்தையை தத்தெடுப்பதாக வாக்குறுதி அளித்ததை பார்த்த கமல் அவரை பாராட்டினார். அப்பொழுதுமே சென்றாயனின் மனைவி கயல்விழி கர்ப்பமாக இருப்பதாகவும், இது தெரியாமல் அவர் குழந்தைக்காக ஏங்குவதாகவும் சமூக வலைதளங்களில் பேச்சாக கிடந்தது.

கயல்விழி

பிக் பாஸ் வீட்டிற்கு இன்று கயல்விழி வந்துள்ளார். நீ அப்பா ஆகிட்ட என்று கயல்விழி கூறியதை கேட்டு சென்றாயன் கதறி அழுதார். அதை பார்த்த கயல்விழியும் அழுதார். சென்டு நீங்க உண்மையாகவே மகிழ்ச்சியில் அழுதாலும் இதில் பிக் பாஸின் வேலையும் சிறிது இருக்குமோ என்ற சந்தேகம் இல்லாமல் இல்லை. அது போகட்டும், வாழ்த்துக்கள் சென்டு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X